For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் மகனை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிரெய்னிங் எடுத்த இங்கிலாந்து

லண்டன்: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை தங்களது குழு பயிற்சியின்போது ஈடுபடுத்தியுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள்.

இங்கிலாந்து வீரர்களுக்கு அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசி அவர்களுக்கு பேட்டிங் பயிற்சி கொடுத்தார்.

முதலில் பந்து வீசிய சிறுவன் யார் என்று இங்கிலாந்து வீரர்களுக்குத் தெரியவில்லையாம். பின்னர்தான் அது சச்சின் மகன் அர்ஜூன் என்று தெரிய வந்து ஆச்சரியப்பட்டனராம்.

2வது ஆஷஸ் டெஸ்ட்

2வது ஆஷஸ் டெஸ்ட்

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

நெட் பவுலராக மாறிய அர்ஜூன்

நெட் பவுலராக மாறிய அர்ஜூன்

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நெட் பயிற்சியின்போது பல நெட் பவுலர்கள், இங்கிலாந்து வீரர்களுக்கு பந்து வீசினர். அப்போது அர்ஜூனும் அவர்களில் ஒருவராகப் போய் பந்து வீசினர். இங்கிலாந்து வீரர்களுக்கு முதலில் அவர் யார் என்பது தெரியவில்லை.

செம பந்து வீச்சுப்பா

செம பந்து வீச்சுப்பா

அர்ஜூன் டெண்டுல்கர் சிறப்பாக பந்து வீசுவதாக இங்கிலாந்து பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். அதன் பிறகே வீரர்கள் அவர் யார் என்று விசாரித்தபோது அர்ஜூன் டெண்டுல்கர் என்று தெரிய வந்து ஆச்சரியப்பட்டனராம்.

குக் பாராட்டு

குக் பாராட்டு

அர்ஜூன் பந்து வீசுவதை உன்னிப்பாக கவனித்த கேப்டன் அலிஸ்டயர் குக், அர்ஜூன் சிறப்பாக பந்து வீசுவதைப் பார்த்துப் பாராட்டினார்.

இந்திய வீரர்களுக்கும் வீசியவர்

இந்திய வீரர்களுக்கும் வீசியவர்

அர்ஜூன் இதுபோல தேசிய அணி வீரர்களுக்குப் பந்து வீசுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு இந்திய அணி வீரர்களுக்குப் பந்து வீசியுள்ளார். ஐபிஎல் போட்டிகளின்போது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கும் பந்து வீசியுள்ளஆர்.

பால் பாய்

பால் பாய்

சச்சின் தனது கடைசி மற்றும் 200வது சாதனை டெஸ்ட் போட்டியில் மும்பை வாங்கடே மைதானத்தில் ஆடியபோது பந்து எடுத்துப் போடும் பையனாகவும் செயல்பட்டார் அர்ஜூன்.

தம்பி பேட்டிங்கும் பண்ணுவாப்ல

தம்பி பேட்டிங்கும் பண்ணுவாப்ல

பந்து வீச்சில் மிளிர்ந்து வரும் அர்ஜூன் இடது கை பேட்ஸ்மேனும் கூட. திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி அணிக்காக ஆடியபோது 42 பந்துகளில் 118 ரன்களைக் குவித்து கடந்த ஆண்டு அசத்தினார்.

லார்ட்ஸ் பக்கத்துல தான் வீடு

லார்ட்ஸ் பக்கத்துல தான் வீடு

லார்ட்ஸ் மைதானத்திற்கு அருகில்தான் சச்சின் டெண்டுல்கர் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கியுள்ளார். ஜூன் - ஜூலை மாதத்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியையொட்டி லண்டன் வந்து விடுவார் சச்சின். அப்போது இந்த வீட்டில்தான் தங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 16, 2015, 12:09 [IST]
Other articles published on Jul 16, 2015
English summary
There was a young 'net' bowler at Lord's on Wednesday (July 15) as England prepared for the 2nd Ashes Test against Australia. Though English players were initially not aware who the boy was, they were told it was Arjun Tendulkar, the son of batting legend Sachin Tendulkar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X