For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே அணி அஸ்வினை கைவிட காரணம் டோணி?

By Veera Kumar

Recommended Video

அஸ்வினை வாங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பெங்களூர்: இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் டோணி நடுவே நிலவும் பனிப்போர்தான், அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் கைவிட காரணம் என கூறப்படுகிறது.

டோணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக இருந்தவர் அஸ்வின். சாக்ஷி இல்லாமல் கூட டோணி வாழ்ந்துவிடுவார், ரெய்னாவும், அஸ்வினும் இல்லாமல் முடியாது என கேலியாக கிரிக்கெட் உலகில் ஒரு பேச்சு இருந்தது.

ஆனால், இதெல்லாம் கோஹ்லி கேப்டனாகும் வரைதான். கோஹ்லி, ஒருநாள் அணியிலும், டெஸ்ட் அணியிலும் கேப்டனான பிறகு நிலைமை மாறிவிட்டது.

டீமில் இருந்து கழற்றப்பட்டனர்

டீமில் இருந்து கழற்றப்பட்டனர்

டோணியுடன் இருந்த நெருக்கத்தால் மட்டுமே டீமில் இருந்த வீரர்கள் மெல்ல கழற்றிவிடப்பட்டனர். அதில் ரெய்னா முக்கியமானவர். அதிரடி வீரரான ரெய்னா இன்றி லோவர்-மிடில் ஆர்டர் தடுமாறியபோதிலும், அசரவில்லை கோஹ்லி. ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் கொடுப்போமே தவிர ரெய்னாவுக்கு இல்லை என்பதில் பிடிவாதமாக இருந்தார் கோஹ்லி.

கோஹ்லியின் செல்லப்பிள்ளை

கோஹ்லியின் செல்லப்பிள்ளை

அதேநேரம், அஸ்வின், புது கேப்டன் கோஹ்லியின் செல்லப்பிள்ளையாக மாறிக்கொண்டார். அரசியலில் கட்சிவிட்டு கட்சிமாறியதை போல வியப்பாக பார்த்தனர் விளையாட்டு துறை பத்திரிகையாளர்கள். ஆனால் சிலரோ இதை எதிர்பார்த்திருந்தனர். அஸ்வினுக்கும் அணியில் இடம் கிடைத்துக்கொண்டிருந்தது. அஸ்வின் திறமையும் அதற்கு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது என்றாலும், திறமை மட்டுமே காரணம் இல்லை என்பது உலகறிந்த ரகசியம்.

வெளியே வந்த உரசல்

வெளியே வந்த உரசல்

ஒரு சந்தர்ப்பத்தில், அஸ்வின்-டோணி உரசல் வெளியுலகிற்கு வெளிப்படையாக தெரிந்தது. 2016ல் ஐசிசி சார்பில் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை தட்டிச் சென்றார் அஸ்வின். விருதை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்து பேசுகையில், தனது வெற்றியில் விராட் கோஹ்லி அப்போதைய பயிற்சியாளர் அனில்கும்ப்ளே ஆகியோருக்கு பங்குள்ளதாக தெரிவித்தார். ஆனால் டோணி பெயரை குறிப்பிடவேயில்லை.

அஸ்வின் புறக்கணிப்பு

அஸ்வின் புறக்கணிப்பு

இந்த நிலையில்தான், டோணி தலைமையிலான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அஸ்வினை ஏலத்தில் எடுக்க இன்று ஆர்வம் காண்பிக்கவில்லை. ஆனால் பஞ்சாப் அணி ரூ.7.6 கோடி என்ற நல்ல விலைக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. அதேநேரம் சில நாட்கள் முன்பு அளித்த பேட்டியில், அஸ்வினை, சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைக்க முயலும் என்று டோணி கூறியிருந்தார். இன்றைய ஏலத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. டோணி-அஸ்வின் நடுவேயான விரிசல்தான் சிஎஸ்கே ரசிகர்கள் அஸ்வினை தங்கள் அணிக்காக ஆடுவதை பார்க்க முடியாமல் போக காரணம் என கூறப்படுகிறது.

Story first published: Saturday, January 27, 2018, 17:29 [IST]
Other articles published on Jan 27, 2018
English summary
Ashwin didn't acknowledge Dhoni for his success whilst giving all the credit to Test skipper Virat Kohli, coach Anil Kumble, Indian cricket team's support staff and his family while bagging ICC Cricketer of the Year and ICC Test Cricketer of the Year awards.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X