
2018 ஏலம்
ரவிசந்திரன் அஸ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் வாங்கியது. 7.60 கோடிக்கு அஸ்வின் ஏலம் எடுக்கப்பட்டார். சென்னை அணி இவரை வாங்காமல் பஞ்சாப் அணிக்கு விட்டுக் கொடுத்தது. இது சென்னை ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அஸ்வின் கேப்டன்
பஞ்சாப் அணியில் அவர் எந்த விதமான போட்டியும் இன்றி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். முதல் முறை இவர் கேப்டனாகி இருப்பதாக இவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது. இதனால் பஞ்சாப் அணிக்கு தமிழர்களின் ஆதரவும் அதிகமாகி உள்ளது.

பெரிய விமர்சனம்
ஆனால் இவர் கேப்டன் ஆனதை பலரும் விமர்சித்தார்கள். யுவராஜ் போன்ற முன்னணி வீரர்கள் இருக்கும் போது அஸ்வின் கேப்டன் ஆவது சரியா என்று கூட கேட்டார்கள். வெளிநாட்டு வீரர்களை கேப்டனாக நியமிக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கி இருந்தார்கள். ஆனால் அணி நிர்வாகம் அஸ்வினைதான் தேர்வு செய்தது.
நிரூபித்தார்
இந்த நிலையில் தற்போது பஞ்சாப் அணி வென்றுள்ளது. முதல் ஓவரில் ஸ்பின் போட்டது மட்டுமில்லாமல், டி-20 போட்டி முழுக்க அவர் ஸ்பின் பவுலருக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய தலைமைபன்பை நிரூபித்தார். இதன் முதல் அவர் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
