வாவ்.. லெக் ஸ்பின்னில் புகுந்து விளையாடிய அஸ்வின்.. பேட்ஸ்மேன்களை குழப்பிய பவுலிங் ஸ்டைல்!

Posted By:
நிதானமாக ஆடிய டெல்லி கேப்டன்ஷிப்பில் கலக்கிய அஸ்வின்

பஞ்சாப்: தற்போது பஞ்சாப் விளையாடி வரும் ஐபிஎல் போட்டியில் அந்த அணியின் கேப்டன் அஸ்வின் லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் இரண்டும் வீசி உள்ளார்.

ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லியும், பஞ்சாப்பும் இன்று நேருக்கு நேர் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அஸ்வின் முதல்முறையாக கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். முதல்முறையாக அவர் பிசிசிஐ அங்கீகரித்த போட்டி ஒன்றில் இப்படி இரண்டு ஸ்டைலில் பந்து வீசி இருக்கிறார்.

இரண்டு விதமான் பவுலிங்

இரண்டு விதமான் பவுலிங்

இவர் இந்த போட்டியில் லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்களுக்கு ஆஃப் ஸ்பின் செய்தார், ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன்களுக்கு லெக் ஸ்பின் போட்டார். இது அந்த பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அளவில் நெருக்கடியை கொடுத்தது. தற்போது இவர் மட்டுமே இந்திய அணியில் இரண்டு விதமான பவுலிங் போடக்கூடிய நபர் ஆவார்.

எப்படி

எப்படி

இவரது லெக் ஸ்பின் பவுலிங் ஸ்டைல் கிட்டத்தட்ட அணில் கும்ப்ளே போலவே இருக்கிறது. அவர் நடந்து வருவது தொடங்கி, மணிக்கட்டை சுழற்றுவது வரை எல்லாமே அப்படியே அவரது ஸ்டைலில் இருக்கிறது. கொஞ்சம் பழைய அஸ்வின் ஸ்டைலும் இதில் உள்ளது.

3 மாதம்

3 மாதம்

அஸ்வின் வெறும் 3 மாதத்தில் தன்னுடைய பவுலிங் ஸ்டைலை லெக் ஸ்பின்னுக்கு மாற்றி இருக்கிறார். பலருக்கும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடைசியாக நடந்த இராணி கோப்பை போட்டியில் அவர் அப்படித்தான் பந்து வீசி இருக்கிறார்.

நன்றாக சுழன்றது

நன்றாக சுழன்றது

அவர் போடும் பந்து மிகவும் நன்றாக சுழன்றது. ஆனால் இராணி கோப்பை போட்டியில் அவர் போட்ட பந்து அந்த அளவிற்கு சுழலவில்லை. இடைப்பட்ட ஒரு மாதத்தில் அவர் மிகவும் சரியாக ஐபிஎல் போட்டிக்காக தயாராகி இருக்கிறார். இது இந்த போட்டியில் அவருக்கு நன்றாக உதவியது.

மீண்டும் வருவார்

மீண்டும் வருவார்

அஸ்வின் இதுவரை பந்தை விரல் மூலமாகச் சுற்றும் பின்கர் ஸ்பின் பவுலிங் போட்டு வந்தார். இது கடிகார முள் சுழலும் திசையில் பந்தை சுழற்றும். ஆனால் இதில் சரியாக விக்கெட் விழவில்லை என்பதால் அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது இவர் இரண்டு வகையில் பவுலிங் செய்வதால் எப்போது வேண்டுமானாலும் அணிக்கு தேர்வாகலாம்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Punjab opts bowling against Delhi in IPL 2018. Ashwin uses new leg spin style against Delhi in IPL 2018.
Story first published: Sunday, April 8, 2018, 18:27 [IST]
Other articles published on Apr 8, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற