For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஓஹோ.. சாஹினின் ட்ரிக் இதுதானா” பாகிஸ்தானுடனான போட்டி.. இந்திய வீரர்களுக்கு சீனியர் முக்கிய அட்வைஸ்

பாகிஸ்தான்: இந்திய அணிக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் சாஹீன் அஃப்ரிடியின் பவுலிங்கை எப்படி சமாளிப்பது என பாகிஸ்தான் முன்னாள் வீரரே அட்வைஸ் கூறியுள்ளார்.

Recommended Video

India அணிக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் Shaheen Afridi-ஐ சமாளிப்பது பற்றி Kaneria *Cricket

ஆசியக்கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஆகஸ்ட் 28ம் தேதியன்று துபாயில் நடைபெறுகிறது.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

ஆசியக்கோப்பை தொடர்

ஆசியக்கோப்பை தொடர்

கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் போது, உலகக்கோப்பை வரலாற்றிலேயே இந்திய அணி முதல்முறையாக பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. குறிப்பாக 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் இந்த முறை அதற்கு தரமான பதிலடி கொடுக்க இந்திய அணி காத்துள்ளது.

 சாஹீனின் அச்சுறுத்தல்

சாஹீனின் அச்சுறுத்தல்

கடந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சாஹீர் அஃப்ரிடி தான். அவரின் முதல் சில ஓவர்களிலேயே இந்திய டாப் ஆர்டர் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். மேலும் புதிய பந்தில் விக்கெட் எடுப்பதில் சாஹீன் அஃப்ரிடி சிறந்த பவுலராக வலம் வருகிறார்.

முன்னாள் வீரர் அட்வைஸ்

முன்னாள் வீரர் அட்வைஸ்

இந்நிலையில் சாஹீன் அஃப்ரிடியை எப்படி சமாளிப்பது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தனிஷ் கனேரியா கூறியுள்ளார். அதில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உலகதரம் வாய்ந்த வீரர்கள். அவர்கள் சாஹீன் அஃப்ரிடியை பார்த்து பயப்படக்கூடாது. புதிய பந்துகளில் சாஹீன் ஃபுல் லெந்த் பந்துகளை வீசுவார், அதுவும் நல்ல ஸ்விங்குடன் பந்து வரும். எனவே அதனை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக வேண்டும்.

எப்படி ஆடுவது?

எப்படி ஆடுவது?

சாஹீனின் அந்த ஃபுல்லர் லெந்த் பந்துகளை, காலை முன் வைத்து உடலுக்கும் பேட்டிற்கும் இடைவெளி விட்டு விளையாடுகிறார்கள். ஆனால் அப்படி விளையாடினால் அவுட்டாகிவிடுவார்கள். காலை பயன்படுத்தாமல், உடலுக்கு அருகேயே பந்தை வரவைத்து பேட்டை பயன்படுத்தி ஆட வேண்டும்.

அந்த ஒரு ஷாட்

அந்த ஒரு ஷாட்

இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஃப்ளிக் ஷாட்களை ஆடுவதில் சிறப்பாக இருக்கிறார். அவர் பந்தை நன்கு காலுக்கு அருகில் வரவிட்டு, லெக் ஸ்கொயர் திசையில் சுழற்றி அடிப்பார். இதுபோன்ற ஷாட்கள் சாஹீன் அஃப்ரிடியை எதிர்கொள்வதற்கு சிறந்த ஒன்றாகும் என தனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

Story first published: Thursday, August 11, 2022, 12:01 [IST]
Other articles published on Aug 11, 2022
English summary
Danish kaneria advice to indian batsmens ( ஆசியக்கோப்பை தொடர் ) ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் சாஹீன் அஃப்ரிடியை எப்படி சமாளிப்பது என இந்திய வீரர்களுக்கு தனிஷ் கனேரியா அட்வைஸ் கூறியுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X