தோனி - ரோகித் செய்த தவறு.. கலக்கத்தில் பிசிசிஐ.. வருமானத்திற்கே ஆப்பு வச்சுட்டாங்களே..!!

மும்பை: ஐபிஎல் 15வது சீசனால் பிசிசிஐக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. கிடைத்த பணத்தை மேலும் அதிகரிக்க பிசிசிஐ எடுத்த நடவடிக்கையே தற்போது வினையாக மாறிவிட்டது.

ஐபிஎல் தொடரை பெரிது படுத்த நினைத்த பிசிசிஐ புதியதாக 2 அணிகளை சேர்த்தது. இதற்காக மெகா ஏலம் நடைபெற்றது.

ஐபிஎல்- 5 ஆண்டுக்கு பிறகு முடிவுக்கு வந்த மும்பை, சிஎஸ்கே ஆதிக்கம்- சொதப்பலுக்கு காரணம் என்ன? ஐபிஎல்- 5 ஆண்டுக்கு பிறகு முடிவுக்கு வந்த மும்பை, சிஎஸ்கே ஆதிக்கம்- சொதப்பலுக்கு காரணம் என்ன?

இதன் காரணமாக சென்னை, மும்பை அணியின் பலமே பாதிக்கப்பட்டது. இரு அணிகளின் முக்கிய வீரர்கள் வேறு அணிக்கு சென்றனர்.

சரிந்த டிஆர்பி

சரிந்த டிஆர்பி

இந்த நிலையில், குஜராத், லக்னோ அணிகள் சிறப்பாக விளையாடினாலும், அவர்களது போட்டியை காண பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வம் எழவில்லை. மேலும் ஐபிஎல் தொடரின் டிஆர்பி கடந்த ஆண்டு வாரங்களை ஓப்பிடும் போது 20 சதவீதத்திற்கு மேல் குறைந்தது.இதற்கு காரணம் சீசன் தொடக்கத்தில் சென்னை, மும்பை அணி பெற்ற தோல்வி தான் காரணம்.

குறைந்த ஆர்வம்

குறைந்த ஆர்வம்

தற்போது சிஎஸ்கே அணியும், மும்பை அணியும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் தொடரை விட்டு வெளியேறியது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் உடைய அணிகள் பிளே ஆப் விளையாடவில்லை என்றால், அந்த போட்டிகளை காண அவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதனால் ஐபிஎல் தொடரின் டிஆர்பி மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.

கலக்கத்தில் பிசிசிஐ

கலக்கத்தில் பிசிசிஐ

ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு விளம்பரங்களுக்கு கூடுதல் கட்டணத்தை வசூல் செய்ய பிசிசிஐ முடிவு எடுத்தது. ஆனால், சிஎஸ்கே, மும்பை அணிகள் இல்லாததால் பிசிசிஐ கலக்கத்தில் உள்ளது. டிஆர்பியும் குறைவாக இருப்பதால் விளம்பரத்தாரர்களும் கட்டணத்தை குறைக்க ஸ்டார் நிறுவனத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அடுத்த ஏலம்

அடுத்த ஏலம்

இதனிடையே, 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை உயர்த்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. ஆனால் பார்வையாளர்கள் சரிந்துள்ளதால் நினைத்த வருமானம் எட்ட முடியாத நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது. தங்களுடைய அணிகளை மெகா ஏலம் உடைத்ததற்காக தோனியும், ரோகித்தும் பிசிசிஐக்கு ரிவெங்ச் வைத்துவிட்டதாக ரசிகர்களும் கிண்டல் அடித்தனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BCCI faces Huge Problem because of CSK ansd MI exclusion ஐபிஎல் 15வது சீசனால் பிசிசிஐக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது
Story first published: Friday, May 13, 2022, 21:00 [IST]
Other articles published on May 13, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X