ஐபிஎல் நேரம் மாற்றம் செய்யப்படுமா -பிசிசிஐ கூட்டத்தில் ஆலோசனை

IPL 2020 | BCCI meeting on IPL match timings

டெல்லி : ஐபிஎல் நேர மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து டெல்லியில் இன்று நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் ஐபிஎல் நிர்வாகிகள்ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ள இந்த கூட்டத்தில் 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் இறுதி செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் உள்ளிட்டவர்களின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், இந்த கிரிக்கெட் ஆலோசனை குழு உறுப்பினர்கள் இணைந்து தலைமை தேர்வாளர் உள்ளிட்ட தேசிய தேர்வாளர் குழுவை தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் -கோலி, ரோகித் அஞ்சலி

ஐபிஎல் நிர்வாகிகள் ஆலோசனை

ஐபிஎல் நிர்வாகிகள் ஆலோசனை

ஐபிஎல் நேர மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து டெல்லியில் நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் அதன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

ஒளிபரப்பாளர்கள் கோரிக்கை

ஒளிபரப்பாளர்கள் கோரிக்கை

ஐபிஎல் நேரத்தை இரவு 8 மணியிலிருந்து 7 அல்லது 7.30 மணிக்கு மாற்ற ஐபிஎல் ஒளிபரப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகிகள் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

நிர்வாகிகள் ஆலோசனை

நிர்வாகிகள் ஆலோசனை

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஐபிஎல் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்தில் விவாதம்

ஆலோசனை கூட்டத்தில் விவாதம்

ஐபிஎல்லில் இணைய மேலும் இரு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள அணிகளின் எண்ணிக்கையை கூட்டி 10 அணிகள் கொண்ட தொடராக மாற்றவும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஐபிஎல் போட்டிகளை நடத்தவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட உள்ளதாக பிசிசிஐ மூத்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

காம்பீர், சுலக்ஷனா தேர்வு இல்லை

காம்பீர், சுலக்ஷனா தேர்வு இல்லை

சிஏசி உறுப்பினர்களாக கவுதம் காம்பீர் மற்றும் சுலக்ஷனா நாயக் இருவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காம்பீர் எம்.பியாக உள்ளதும், சுலக்ஷனா ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகாததும் இதற்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளன.

சிஏசி உறுப்பினர்கள் தேர்வு

சிஏசி உறுப்பினர்கள் தேர்வு

இதனிடையே பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பங்கேற்கவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் தேர்வு இறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வாளர்களை தேர்வுசெய்யும் சிஏசி உறுப்பினர்கள்

தேர்வாளர்களை தேர்வுசெய்யும் சிஏசி உறுப்பினர்கள்

தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் உள்ளிட்டவர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தேர்வாளர்களை இந்த சிஏசி உறுப்பினர்கள் இறுதி செய்வார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BCCI Meet : Sourav Ganguly expected to finalise the 3 member CAC
Story first published: Monday, January 27, 2020, 14:16 [IST]
Other articles published on Jan 27, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X