For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷிகர் தவானின் அனுபவம்.. உலகக்கோப்பையில் இந்தியா பயன்படுத்த வேண்டும்.. எச்சரிக்கும் முக்கிய நிர்வாகி!

மும்பை: 2023ம் ஆண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடரில் ஷிகர் தவானின் அனுபவத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட்டரும், பிசிசிஐ நிர்வாகியுமான அஞ்சும் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அனுபவ தொடக்க வீரர் ஷிகர் தவான். கடந்த 4 ஐபிஎல் தொடர்களில் ஷிகர் தவானின் சராசரி 34ஆக உள்ளது. அதேபோல் 2015ம் ஆண்டுக்கு பின் ஒவ்வொரு ஐபிஎல் தொடரில் 400 ரன்களுக்கு கீழ் ரன்கள் குறைந்ததே இல்லை.

இருந்தும் இந்திய டி20 அணியில் இருந்து ஷிகர் தவான் தொடர்ந்து ஓரம்கப்பட்டே இருக்கிறார். டாப் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனின் தேவை இருந்தும், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஷிகர் தவானை தேர்வு செய்யவில்லை.

கே.எல்.ராகுல் எடுத்த பெரும் ரிஸ்க்.. வங்கதேச டெஸ்டில் இந்தியாவுக்கு வந்த கண்டம்.. இதை யோசிக்கலையேங்க கே.எல்.ராகுல் எடுத்த பெரும் ரிஸ்க்.. வங்கதேச டெஸ்டில் இந்தியாவுக்கு வந்த கண்டம்.. இதை யோசிக்கலையேங்க

ஷிகர் தவான் சொதப்பல்

ஷிகர் தவான் சொதப்பல்

ஆனால் இந்திய ஒருநாள் அணிக்கான கேப்டனாக பல்வேறு தொடர்களில் செயல்பட்டு வருகிறார். இன்னும் சொல்லப் போனால், கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக ஷிகர் தவானே செயல்பட்டுள்ளார். இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பிய பின், தொடக்க வீரராக விளையாடினார்.

தவான் எதிர்காலம்?

தவான் எதிர்காலம்?

ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியிலும் ஷிகர் தவானின் ஃபார்ம் மோசமாக இருந்தது. மொத்தமாகவே 25 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். இதனால் பலரும் கில் அல்லது இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.

அஞ்சும் சோப்ரா கருத்து

அஞ்சும் சோப்ரா கருத்து

சில மாதங்களுக்கு முன் ஷிகர் தவான் கூறுகையில், இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவேன் என்று தெரியாது. தற்போது எனது மொத்த கவனமும், இலக்கும் 2023ம் ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள உலகக்கோப்பை தொடர் மட்டும் தான் என்று கூறி இருந்தார். இந்த கருத்து குறித்து இந்திய முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான அஞ்சும் சோப்ரா கூறுகையில், ஷிகர் தவான் தனது எண்ணத்தை தெளிவாக கூறியுள்ளார்.

அனுபவமும், இளமையும்

அனுபவமும், இளமையும்

இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இந்திய அணி மொத்தம் 9 போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் ஷிகர் தவான் ஆட்டத்தை பொறுத்து முடிவு செய்யப்படும். அதேபோல் இந்திய அணியை அனுபவம் மற்றும் இளமையோடு கட்டமைக்க வேண்டும். அதனால் உலகக்கோப்பைத் தொடரில் ஷிகர் தவான் தேவை உள்ளது என்று தெரிவித்தார்.

Story first published: Friday, December 16, 2022, 16:43 [IST]
Other articles published on Dec 16, 2022
English summary
Former cricketer and BCCI executive Anjum Chopra has said that Shikhar Dhawan's experience should be used in the 2023 World Cup series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X