For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கேப்டன் மாற்றம்- ரோகித் நிலை என்ன? யாருக்கு எல்லாம் வாய்ப்பு.. BCCI தகவல்

பெங்களூரு: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய அணியின் கேப்டன் மாற்றப்படுகிறார். ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் தென்னாப்பிரிக்க தொடரில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார்

இதில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் கேப்டன் சிக்கல் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

இந்த நிலையில், ரோகித் சர்மா தனது உடல் தகுதியை நிரூபிக்கும் தேர்வில் பங்கேற்றார்.

இந்திய அணியில் மீண்டும் ஹர்திக் பாண்ட்யா.. அதீத நம்பிக்கை வைக்கும் பிசிசிஐ.. காரணம் என்ன? இந்திய அணியில் மீண்டும் ஹர்திக் பாண்ட்யா.. அதீத நம்பிக்கை வைக்கும் பிசிசிஐ.. காரணம் என்ன?

ரோதித்துக்கு தேர்வு

ரோதித்துக்கு தேர்வு

முதலில் அவருக்கு யோ யோ டெஸ்ட் நடத்தப்பட்டது. இதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ரோகித் சர்மா இலக்கை எட்டியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, அவர் வலை பயிற்சியில் பங்கேற்று பேட்டிங் செய்தார். இதில் அவருக்கு எதாவது வலி ஏற்படுகிறதா, பந்தை எப்படி அடிக்கிறார் என்பது குறித்து கண்காணிக்கப்பட்டது.

ஹிட்மேன் ரிட்டன்ஸ்

ஹிட்மேன் ரிட்டன்ஸ்

இதனையடுத்து ரோகித் சர்மா தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் மாற்றப்பட்டு , ஒருநாள் அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தமக்கு இந்த இளம் வீரர்கள் எல்லாம் வேண்டும் என்று ரோகித் சர்மா தேர்வுக்குழுவினரிடம் கேட்டுள்ளார். தற்போது அந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

பரிந்துரை

பரிந்துரை

மேற்கிந்தியத் தீவுகள் பலமான அணி என்பதால் கோலி, ராகுல், தவான், பும்ரா போன்ற சீனியர்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு பும்ராவுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்பதால் அவருக்கு தேர்வுக்குழு ஓய்வு வழங்க உள்ளதாக தெரிவித்து இருக்கிறது.மேலும் அஸ்வினும் சிகிச்சை எடுக்க உள்ளதால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது என தேர்வுக்குழு கூறியுள்ளது.

Recommended Video

Powell, Pooran Innings seals win for West Indies against England in 3rd T20 | OneIndia Tamil
புதிய வீரர்கள்

புதிய வீரர்கள்

அதன் பின்னர் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட், ஷாரூக்கான், ஆல் ரவுண்டர் ரிஷி தவான் ஆகியோரை ரோகித் கேட்டுள்ளதாக தெரிகிறது. சுழற்பந்துவீச்சில் ரவி பிஸ்னாய், வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் முகமது சிராஜ் ஆகியோரையும் ரோகித் சர்மா கேட்டுள்ளார். இதனையடுத்து, இந்திய அணி இன்று மாலையோ நாளையோ அறிவிக்கப்பட உள்ளது.

Story first published: Wednesday, January 26, 2022, 16:31 [IST]
Other articles published on Jan 26, 2022
English summary
BCCI to change captain for WI series as Rohit sharma Passed the fitness Test, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கேப்டன் மாற்றம்- ரோகித் நிலை என்ன? யாருக்கு எல்லாம் வாய்ப்பு.. BCCI தகவல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X