For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பரீந்தர் ஸ்ரன்.. திண்டுக்கல் போட்டியில் அம்பயர் மண்டையை உடைத்தவர்!

பெர்த்: இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுக வீரராக களம் இறங்கியுள்ள பரீந்தர் ஸ்ரன், ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரரே அல்ல. மாறாக அவர் குத்துச் சண்டை வீரராக விளையாட்டு உலகில் கால் பதித்தவர் ஆவார். ஆனால் இன்று இந்தியாவின் புதிய வேகப் பந்து வீச்சாளராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

23 வயதேயானே பரீந்தர் ஒரு இடது கை வேகப் பந்து வீச்சாளர் ஆவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பெர்த்தில் நடந்து வரும் ஒரு நாள் போட்டியில் களம் குதித்துள்ளார். இதுதான் இவருக்கு முதல் சர்வதேசப் போட்டியாகும்.

புதுமுக வீரர் ஸ்ரனுக்கு இந்தியவீரர்களுக்கான தொப்பியை கேப்டன் டோணி வழங்கி பாராட்டும்., வாழ்த்தும் தெரிவித்தார்.

6 வருட வளர்ச்சி

6 வருட வளர்ச்சி

கடந்த 6 வருடங்களில் ஸ்ரன் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளார். குத்துச் சண்டை வீரராக களம் இறங்கி அப்படியே கிரிக்கெட்டுக்கு வந்து விட்டார்.

விவசாயியின் மகன்

விவசாயியின் மகன்

ஸ்ரனின் தந்தை பெயர் பல்பீர் சிங். பஞ்சாப் மாநிலம் பிவானியைச் சேர்ந்தவர். விவசாயி. 2007ம் ஆண்டு குத்துச் சண்டை வீரராக அறிமுகமானார் ஸ்ரன். பிவானி பாக்ஸிங் கிளப்பில் பயிற்சியும் எடுத்தார்.

விஜேந்தர் சிங் ஊர்க்காரர்

விஜேந்தர் சிங் ஊர்க்காரர்

இந்தியாவின்ஸ மிகப் பிரபலமான குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்கின் ஊர்தான் பிவானி. அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதால் ஸ்ரனுக்கும் ஆரம்பத்தில் குத்துச் சண்டைதான் பிடித்திருந்தது.

2009ல் தடம் மாறினார்

2009ல் தடம் மாறினார்

2 வருடம் குத்துச் சண்டை வீரராக வலம் வந்த ஸ்ரன் கண்ணில் 2009ம் ஆண்டு ஒரு பத்திரிகை விளம்பரம் பட்டது. அதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பந்து வீச்சாளர் ஆள் தேர்வு நடைபெறுவதாக வந்திருந்தது. அதைப் பார்த்த ஸ்ரன் சற்றும் யோசிக்காமல் தேர்வுக்குப் போயிருந்தார். அன்றே அவரது வாழ்க்கை மாறிப் போனது.

பவுலராக மாறினார்

பவுலராக மாறினார்

அந்த சோதனையில் வென்ற ஸ்ரன் பந்து வீச்சாளர் பயிற்சிக்காக துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஐசிசியின் பயிற்சி அகாடமியில் பயிற்சியில் சேர்ந்தார்.

2011ல் கிரிக்கெட் அறிமுகம்

2011ல் கிரிக்கெட் அறிமுகம்

அதன் பின்னர் 2011ம் ஆண்டு பஞ்சாப் அணியில் இடம் பிடித்தார் ஸ்ரன். அதே ஆண்டு அவர் ரஞ்சி டிராபி போட்டியிலும் அறிமுகமானார். ஆனால் பின்னர் காயம் காரணமாக 3 வருடம் விளையாட முடியாமல் போய் விட்டது.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மாறினார்

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மாறினார்

பின்னர் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை அணுகினார். அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிடின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். இதனால் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார்.

ஜாகிர்கான் - வாசிம் அக்ரம்

ஜாகிர்கான் - வாசிம் அக்ரம்

இந்தியாவின் ஜாகிர் கான் மற்றும் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஆகியோர்தான் ஸ்ரனுக்கு மிகவும் பிடித்த பந்து வீச்சாளர்களாம். இவர்களைப் பார்த்தே தான் பவுலராக வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் சொல்கிறாரா்.

திண்டுக்கல் போட்டியில் மண்டையை உடைத்தவர்

திண்டுக்கல் போட்டியில் மண்டையை உடைத்தவர்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திண்டுக்கல்லில் பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு இடையிலான ரஞ்சிக் கோப்பைப் போட்டி நடந்தது. அப்போது இவர் வீசிய பந்து பட்டு ஆஸ்திரேலிய நடுவரான ஜான் வார்ட் தலையில் ரத்தம் கொட்டி விட்டது. அடிபட்ட வேகத்தில் நடுவர் கீழே விழுந்து விட்டார். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சிகிச்சை அளித்து அவர் சரியானார் என்பது நினைவிருக்கலாம்.

இதுவரை 32 விக்கெட்கள்

இதுவரை 32 விக்கெட்கள்

இதுவரை 11 முதல் தர போட்டிகளில் ஆடி 32 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் ஸ்ரன். 8 லிஸ்ட் ஏ போட்டிகளில் 16 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். 10 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி 8 விக்கெட் எடுத்துள்ளார். ஐபிஎல்லில் ஒரு போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார் விக்கெட் எடுத்ததில்லை.

Story first published: Tuesday, January 12, 2016, 11:01 [IST]
Other articles published on Jan 12, 2016
English summary
Barinder Sran, the new pacer of team India was a boxer initially. This farmer's son became a cricketer in 2009.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X