பும்ரா வீட்டில் கெட்டி மேளம்.... மணப்பெண் அவரேதான் போல... வெளியானது உண்மை விவரம்...

டெல்லி: இங்கிலாந்துடனான தொடரில் இருந்து பும்ரா விலகிய நிலையில் அதற்கு திருமணம் தான் காரணம் என்றும் மணப்பெண் யார் என்றும் தகவல் கசிந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் இருந்து பும்ரா பெயர் நீக்கப்பட்டது. தனிப்பட்ட காரணங்களால் அவர் விலகியதாக கூறப்பட்டது.

இந்திய அணி ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், அவர் விலகியதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.

 டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது. 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2 -1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. எனினும் கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழையும்.

குழப்பம்

குழப்பம்

இதனிடையே இங்கிலாந்துடனான 4வது டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பிசிசிஐ-க்கு பும்ரா கடிதம் எழுதியிருந்தார். மேலும் ஒரு நாள் தொடரிலும் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது. தனிப்பட்ட காரணங்களால் அவர் விலக முடிவு செய்ததாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் குழம்பியிருந்தனர்.

திருமணம்

திருமணம்

இந்நிலையில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அந்த பெரும் நாளுக்காக தயாராகவே பும்ரா விடுமுறை கேட்டதாகவும் பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய அணியில் கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஸ்பின்னர்களுக்கு பிட்ச் ஒத்துழைத்ததால், 4வது போட்டியில் பும்ராவின் தேவை அவ்வளவாக இருக்காது.

 மணப்பெண்

மணப்பெண்

கடந்த ஆண்டு பும்ராவும், ப்ரேமம் திரைப்பட புகழ் அனுபாமா பரமேஸ்வரும் காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு இருவர் தரப்பில் இருந்து எந்த மறுப்பும் வரவில்லை. தற்போது இங்கிலாந்து தொடரில் இருந்து பும்ரா விடுப்பு கேட்டுள்ள நிலையில், நடிகை அனுபாமா பரமேஸ்வரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Happy holiday to me' என பதிவிட்டுள்ளார். இதனால் அனுபாமா தான் மணப்பெண் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Reason behind the Bumrah's leave from England Series is revealed
Story first published: Wednesday, March 3, 2021, 10:07 [IST]
Other articles published on Mar 3, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X