காவிரி போராட்டம் எதிரொலி.. டோணிக்கு புதிய கட்டுப்பாடு விதித்த சிஎஸ்கே நிர்வாகம்

Posted By:

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணிக்கு அணி நிர்வாகம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி அவர் ஐபிஎல் போட்டி முடியும் வரை சென்னையில் சுற்ற கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையில் எங்கு சென்றாலும் அணி நிர்வாக அனுமதி வாங்கி பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன்தான் செல்ல வேண்டும் என்று அணி நிர்வாகம் கூறியுள்ளது. சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையில் இன்று போட்டி நடக்கிறது.

காவிரி பிரச்சனை நடக்கும் போது ஐபிஎல் தேவையா என்று மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். இதனால் தற்போது சேப்பாக்கம் மைதானம் பக்கத்தில் பெரிய பாதுக்காப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஊர் சுற்றுவார்

ஊர் சுற்றுவார்

டோணிக்கும் பைக் ரைடுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த போதே நிறைய முறை பைக்கில ஹெல்மெட் அணிந்து ஊர் ஊராக சுற்றியுள்ளார். பொதுமக்கள் கூடும் இடத்தில் அவர் இப்படி எல்லாம் மாறுவேடத்தில் தன்னுடைய நாட்களை கழித்து இருக்கிறார். அதே போல் அவர் சென்னையிலும் சுற்றியுள்ளார்.

தாய் மண்

தாய் மண்

அவருக்கு சொந்த ஊர் ராஞ்சி என்றாலும் சென்னை மிகவும் பிடிக்கும் என்று பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் மிகவும் பிடித்த இடம் சென்னைதான் என்று அவரு கூறியுள்ளார். சென்னைக்கு அடுத்தபடியாக ஊட்டி அதிகம் பிடிக்கும் என்று கூறியுள்ளார். சென்னையில் பல இடங்களுக்கு அவர் சென்றுள்ளார்.

எப்படி செல்வார்

எப்படி செல்வார்

இவர் பொதுவாக ஹெல்மெட் அணிந்து சென்னையை சுற்றியுள்ளார். மெரினா சென்றுள்ளார். பெசன்ட் நகர் பீச் சென்று இருக்கிறார். ரஜினி வீட்டிற்கு சென்று இருக்கிறார். சென்னையின் முக்கியமான பல இடங்களுக்கு இவர் யாருக்கும் தெரியாமல் ஹெல்மெட் அணிந்து சென்றுள்ளதாக பேட்டி அளித்துள்ளார்.

தடை விதித்தது

தடை விதித்தது

இப்படி இனிமேல் செல்ல கூடாது என்று சென்னை அணி நிர்வாகம் அவருக்கு தடை விதித்துள்ளது. காவிரி போராட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி இப்படி தடை விதித்து இருக்கிறார்கள். அப்படியே சென்றாலும் பாதுகாப்பு அதிகாரிங்களை அழைத்துக் கொண்டு மாறுவேடம் இல்லாமல் செல்ல வேண்டும் என்றுள்ளனர்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Chennai Super Kings management said no to Dhoni's outing plans in Chennai due to Cauvery issue.
Story first published: Tuesday, April 10, 2018, 17:46 [IST]
Other articles published on Apr 10, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற