சென்னை சேப்பாக்கத்தில் என்னென்னிக்கு மேட்ச்னு தெரியுமா?

Posted By:

சென்னை: கோடை வெயில் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், அனல் பறக்கும் ஐபிஎல் போட்டிகள், வரும் 7ம் தேதி துவங்க உள்ளது. மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் 7 போட்டிகள் நடக்க உள்ளன.

இந்தியன் பிரீமியர் லீக் 11வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல் 7ம் தேதி துவங்குகிறது. இந்த முறை, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகின்றன.

 Chennai super kings to open the IPL season

மொத்தம் 8 அணிகள், 51 நாட்கள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன. ஏப்ரல் 7ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் மோத உள்ளன.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னையில்

சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் 7 போட்டிகள் நடக்க உள்ளன. இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னையில் போட்டிகள் நடக்க உள்ளதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 Chennai super kings to open the IPL season

ஏப்ரல் 10ம் தேதி கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோத உள்ளது. அடுத்தது, 20ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ், 28ல் மும்பை இந்தியன்ஸ், 30ல் டெல்லி டேர்டெவில்ஸ், மே 5ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மே 13ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மே 20ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட உள்ளது.

மே 18ல் கடைசி போட்டி

மற்ற 7 அணிகளின் சொந்த ஊர்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட உள்ளது. சீசனின் துவக்கமாக, ஏப்ரல் 7ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை மும்பையில் சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

 Chennai super kings to open the IPL season

அதன்பிறகு இந்தூரில் 15ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐதராபாத்தில் 22ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பெங்களூருவில் 25ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கோல்கத்தாவில் மே 3ல் கோல்கத்தா நைட் ரைடர்ஸ், ஜெய்ப்பூரில் மே 11ல் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லியில் மே 18ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுடன் மோதுகிறது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
IPL season 11 to start on 7th. In the first match in Mumbai, CSK to meet MI. totally 7 matches to be played in Chennai chepauk.
Story first published: Wednesday, April 4, 2018, 18:22 [IST]
Other articles published on Apr 4, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற