ஐபிஎல் போட்டிக்காக பேட்டிங் ஆர்டரை மாற்றிய டோணி.. சிஎஸ்கேவில் எந்த இடத்தில் களமிறங்குகிறார்?

Posted By:
ஐபிஎல் போட்டிக்காக பேட்டிங் ஆர்டரை மாற்றிய தோனி

சென்னை: சென்னை சூப்பர் அணியில் விளையாடும் கேப்டன் டோணி, தன்னுடைய பேட்டிங் ஆர்டரை மாற்றி இருக்கிறார். இந்திய அணியில் சரியான அளவிற்கு அவர் கடந்த சில வருடங்களாக தன்னுடைய திறமையை நிரூபிக்க முடியாத காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

சென்னை மும்பை அணிகள் மோதும் முதல் ஐபிஎல் 2018 போட்டி வரும் சனிக்கிழமை நடக்க உள்ளது. இதற்காக சென்னை அணி மிகவும் கடினமாக பயிற்சி எடுத்து வருகிறது.

இன்னும் சில அணிகள் பயிற்சியே தொடங்காத நிலையில் சென்னை அணி ஒரு வாரத்திற்கு முன்பே பயிற்சியை தொடங்கிவிட்டது. இது போட்டிகளில் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்டிபன் பிளெமிங்

ஸ்டிபன் பிளெமிங்

நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்டிபன் பிளெமிங் சென்னை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது இவர் சென்னை அணியில் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறார். சிஎஸ்கேவிடம் நிறைய பணம் மீதம் இருப்பதால் ஐபிஎல் போட்டியின் இடையில் ஏதாவது வெளிநாட்டு வீரர் புதிய விதியின் படி மற்ற அணியில் இருந்து சென்னை அணிக்கு எடுக்கப்படலாம்.

கூட்டு

கூட்டு

சென்னை அணிக்கு பேட்டிங் ஆர்டரை விட பவுலிங் ஆர்டர் மிகவும் சிறப்பாக இருக்கிறது. லுங்கி சனி கிடி, மார்க் உட், வாட்சன், ஷரத்துள் தாக்குர், தீபக் சாஹர் ஆகியோர் வேகப்பந்து வீச்சிற்கு உதவியாக இருப்பார்கள். ஹர்பஜன் சிங், ரெய்னா ஆகியோர் ஸ்பின் பவுலிங்கில் கை கொடுப்பார்கள். அதேபோல் பார்ட் டைம் பவுலர்களும் அதிகம் உதவுவார்கள்.

 டோணி எங்கு இறங்குவார்

டோணி எங்கு இறங்குவார்

இந்த அணியில் இப்போதெல்லாம் டோணி 5 விக்கெட் விழுந்த பின்தான் இறங்குகிறார். சமயங்களில் 7 வது பேட்ஸ்மேனாக கூட இறங்குகிறார். ஆனால் சென்னை அணிக்காக அவர் 4வது பேட்ஸ்மேனாக இறங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 3 வது பேட்ஸ்மேனாக எப்போதும் போல ரெய்னா களம் இறங்குவார்.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

அதேபோல் டோணிக்கு அடுத்து கேதார் ஜாதவ், அம்பதி ராயுவு களம் இறங்குவார்கள். அதற்கு அடுத்து ஜடேஜா களமிறங்குவார். அதற்கு அடுத்தபடியாக பிராவோ களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இதனால் 8 விக்கெட் விழும் வரை சென்னை அணி பேட்டிங்கில் மிகவும் வலுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
CSK Dhoni changes batting order in IPL 2018.
Story first published: Tuesday, April 3, 2018, 17:43 [IST]
Other articles published on Apr 3, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற