ஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன?.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே

சென்னை: சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி தோல்வியை தழுவியது. முதல் முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பையே சிஎஸ்கே பறிகொடுத்தது.

ஆட்டோ டிரைவரின் மகன்.. செல்லப்பிள்ளை சிராஜ் வாங்கிய பல கோடி ரூபாய் சொகுசு கார்.. எல்லாம் உழைப்பு!

இந்த நிலையில் தற்போது 2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே உள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்கும் 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது

தயார்

தயார்

புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை உருவாக்கும் திட்டத்தில் ஐபிஎல் அணிகள் களமிறங்கி உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி எப்போதும் போல இந்த முறையும் வயதான வீரர்களை அணியில் எடுத்து வருகிறது. இளம் வீரர்களை குறி வைக்காமல் வயதான வீரர்களை சிஎஸ்கே குறி வைக்க தொடங்கி உள்ளது.

உத்தப்பா

உத்தப்பா

இரண்டு நாட்களுக்கு முன் ராஜஸ்தான் அணியில் இருந்து உத்தப்பாவை சிஎஸ்கே அணி வாங்கியது. சிஎஸ்கே அணியின் இந்த முடிவு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி உமேஷ் யாதவையும் வாங்கும் எண்ணத்தில் உள்ளது.

மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்

இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆல் ரவுண்டர் வேறு யாரும் இல்லை ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்தான் என்கிறார்கள். கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் இவர் சரியாக ஆடவில்லை .

பிக்பாஷ்

பிக்பாஷ்

ஆனால் கடந்த பிபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினார். இந்தியாவிற்கு எதிரான டி 20 தொடரிலும் இவர் நன்றாக ஆடினார். இந்த நிலையில் ஒரு வெளிநாட்டு வீரர் தேவைப்படும் நிலையில் அந்த இடத்தில் மெக்ஸ்வெல்லை சிஎஸ்கே எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அல்லது டிரேடிங் முறையில் ஒரு வெளிநாட்டு வீரரை அனுப்பிவிட்டு சிஎஸ்கே இவரை எடுக்கலாம்.

ஓப்பனர்

ஓப்பனர்

சிஎஸ்கே அணியில் தற்போது ஒப்பனர்கள் சரியாக இல்லை. அதேபோல் கேதார் ஜாதவ் ஆடிய இடத்தில் அதிரடியாக ஆடும் வீரர் இல்லை. இதனால் இந்த இடத்திற்கு மேக்ஸ்வெல்லை கொண்டு வருவதற்கு சிஎஸ்கே முயற்சி செய்யலாம் என்று கூறுகிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CSK may aim for Maxwell in the IPL 2021 mini-auction since he is a perfect fit for the allrounder.
Story first published: Saturday, January 23, 2021, 9:52 [IST]
Other articles published on Jan 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X