வயதானவர்களை எல்லாம் டீமில் சேர்த்த டோணி.. என்ன பிளான் தல?

Posted By:
புது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பெங்களூர்: ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் எந்த வீரர்களை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தீயாக வேலை செய்து வருகிறது.

ஆனால் சென்னை அணி மட்டும் மிகவும் வயதான வீரர்களை தேடி தேடி எடுத்துக் கொண்டு இருக்கிறது. அதே சமயத்தில் அனுபவம் நிறைய வீரர்களையும் அணியில் எடுத்து இருக்கிறது.

இது ரசிகர்ளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலர் இது குறித்து சாதகமாகவும் பேசியுள்ளனர்.

வயது

வயது

சென்னை எடுத்த இம்ரான் தாஹிர், அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், பிராவோ, பிளசிஸ், ஹர்பஜன் சிங் ஆகிய அனைவரும் மிகவும் வயதானவர்கள். டோணியையும் சேர்த்து எல்லோரும் 30 பிளஸ் வயது உடையவர்கள்.

இரண்டு

இரண்டு

இதில் ஜடேஜா மட்டுமே 29 வயது உள்ளவர், அதேபோல் கரன் சர்மா 30க்கும் குறைவானவர். இன்னும் சிலர் நாளை எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் எடுக்கப்படலாம்.

சர்ச்சை

சர்ச்சை

இந்த வீரர்கள் இப்போது எப்படி வேண்டுமானாலும் ஆடலாம். ஆனாலும் இன்னும் 3 வருடத்திற்கு இது போன்ற பெரிய ஏலம் விடும் நிகழ்வு நடக்காது. எனவே மூன்று வருடத்திற்கு பின் சென்னை அணி எப்படி இருக்கும் என்று இவர் கவலை கொண்டு இருக்கிறார்.

நடக்கும்

நடக்கும்

அதேசமயத்தில் இரண்டு வருடம் முன்பு நெஹ்ரா அணியில் இடம் கிடைக்காமல் இருந்த போது சென்னை அணியால் எடுக்கப்பட்டார். அதன்பின்புதான் அவர் பார்மிற்கு வந்தார். அதேபோல் இவர்களும் சென்னை அணியில் கலக்குவார்கள் என ரசிகர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
IPL auction 2018 held in Bengaluru today and tomorrow. CSK took Bravo, Kedar Jadhav, Harbhajan Singh, Du Flesis, Shane Waston. CSK already have Dhoni, Jadeja, and Raina.
Story first published: Saturday, January 27, 2018, 16:59 [IST]
Other articles published on Jan 27, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற