For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அறிமுக போட்டியிலேயே "டபுள் செஞ்சுரி".. "மாற்று வீரராக" வளைச்சுப் போட.. முண்டியடிக்கும் ஐபிஎல் அணிகள்

மும்பை: ஐபிஎல் இரண்டாம் கட்டத் தொடரில், இரண்டு அணிகள் ஒரு குறிப்பிட்ட வீரருக்கு டார்கெட் வைத்துள்ளன.

நியூசிலாந்து பேட்ஸ்மேன் டெவோன் கான்வே பற்றிய செய்தி தான் இந்த மாத தொடக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்ட செய்தியாகும். களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், அதுவும் லார்ட்ஸில் இரட்டை சதம் அடித்து அசத்தியிருந்தார்.

ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ள மாட்டேன்.. அதிரடியாக அறிவித்த செரீனா வில்லியம்ஸ்.. காரணம் என்ன?ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ள மாட்டேன்.. அதிரடியாக அறிவித்த செரீனா வில்லியம்ஸ்.. காரணம் என்ன?

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி, லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன்.2ம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்திலேயே சதம் அடித்து அதகளம் புரிந்த கான்வே, இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்தார்.

இரட்டை சதம்

இரட்டை சதம்

ஏதோ, 50 போட்டிகள் விளையாடிய சீனியர் வீரரைப் போல, ஷாட்ஸ் தேர்வில் எந்தவித குழப்பமும், பதட்டமும் இன்றி விளையாடினார். அந்த அணுகுமுறை அவர் மீதான நம்பிக்கையை ஏகத்துக்கும் அதிகரித்திருக்கிறது. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில், அயல்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் அறிமுக போட்டியிலேயே சதமடிப்பது 25 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் நடந்தது. கடைசியாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தான் சதமடித்திருந்தார். அதன் பிறகு, கான்வே தான் இந்தமாதம் அடித்திருந்தார்.

முதல் வாய்ப்பு

முதல் வாய்ப்பு

கிரிக்கெட்டில் தன்னுடைய வாய்ப்புக்காக கான்வே நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. அவர் தனது நாடான சொந்த தென்னாப்பிரிக்காவிலிருந்து, தனது இளம் வயதிலேயே நியூசிலாந்துக்கு குடி பெயர்ந்தார். ஆனால், அங்கு நியூசிலாந்து அணியில் விளையாட வேண்டுமெனில், மூன்று வருடம் காத்திருக்க நேரிட்டது. கடந்த ஆண்டு டி20 வாய்ப்பும், மார்ச் மாதம் ஒருநாள் போட்டி வாய்ப்பும் கிடைத்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக தான் அவருக்கு டெஸ்ட் வாய்ப்பு கிடைத்தது. டி20யில் அவர் சராசரி - 59.12, ஒருநாள் போட்டியில் - 75.00.

கடும் கிராக்கி

கடும் கிராக்கி

அதுமட்டுமின்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்திருந்தார். இந்த நிலையில், வரும் இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகளில், டெவோன் கான்வேக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் இரண்டாம் கட்ட ஆட்டங்களில், மூன்று அணிகள் இவரை மாற்று வீரராக அணியின் எடுக்க தயாராக உள்ளன.

அணிக்கு திரும்பும் வீரர்கள்

அணிக்கு திரும்பும் வீரர்கள்

ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்க, ஆஸ்திரேலிய அணி நிர்வாகமும் இன்னமும் பேச்சுவார்த்தையை இழுத்தடித்து வருகிறது. இதனால் அந்நாட்டு வீரர்கள் பங்கேற்பார்களா என்று தெரியவில்லை. அதேசமயம், நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன், வாட்லிங், கைலே ஜேமிசன், டிரெண்ட் போல்ட் உள்ளிட்ட நியூசிலாந்து வீரர்கள் மீண்டும் அவரவர்கள் அணிக்கு திரும்புகின்றனர்.

கான்வே மாஸ்

கான்வே மாஸ்

இந்த நிலையில் தான், ஐபிஎல் 2ம் கட்ட தொடரில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் டெவோன் கான்வேக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது. சன் ரைஸர்ஸ் அணியில் டேவிட் வார்னருக்கு பதிலாக, கான்வேயை எடுக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இரு வீரர்கள் இம்முறை மிஸ்ஸாவதால், கான்வேயை மாற்று வீரராக வாங்க அந்த அணியும் கடும் முயற்சி மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, June 28, 2021, 19:56 [IST]
Other articles published on Jun 28, 2021
English summary
Devon Conway huge demand IPL 2021 Phase 2 - டெவோன் கான்வே
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X