For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 விஷயங்களை நான் பேச மாட்டேன்.. ஏன்னா அபராதம் போட்ருவாங்க.. தோனி ஏன் இப்படி சொன்னார்?

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான் மோதிய நேற்றைய சூப்பர் 4 போட்டி டை ஆனது.

நேற்று இந்திய அணியில் ரோஹித் சர்மா உட்பட முக்கிய வீரர்கள் ஓய்வில் இருக்க, தோனி அணியை வழிநடத்தி சென்றார்.

[ இந்தியாவுக்கு எதிராக டை என்பதே வெற்றி போல தான்.. ஆப்கானிஸ்தான் கேப்டன் பெருமிதம் ]

சிறப்பாக பந்துவீசிய ஆப்கன் அணி, இந்தியாவை அழுத்தத்திலேயே வைத்து இருந்தது. கடைசி ஓவர் வரை நீண்ட போட்டி, இறுதியில் டையில் முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது அம்பயர் சில தவறான முடிவுகளை எடுத்ததால், இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

தோனியின் LBW விக்கெட்

தோனியின் LBW விக்கெட்

இந்திய அணிக்கு சிறந்த துவக்கம் கிடைத்தது. 127 ரன்கள் இருக்கும் போது, இந்தியாவின் துவக்க வீரர்கள் இருவரும் ஆட்டமிழக்க, தினேஷ் கார்த்திக், தோனி இணைந்து நிதான ஆட்டம் ஆடி வந்தனர். அப்போது ஜாவேத் அஹ்மத் வீசிய பந்து தோனியின் காலில் பட்டது. அதற்கு அவுட் கேட்டனர் ஆப்கன் வீரர்கள். அம்பயர் உடனடியாக அவுட் கொடுத்தார். அது அவுட் இல்லை என்று தோனி தலையை அசைத்துக் கொண்டே வெளியேறினார். அடுத்து ரீப்ளேயில் பந்து விக்கெட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

தினேஷ் கார்த்திக்கின் LBW விக்கெட்

தினேஷ் கார்த்திக்கின் LBW விக்கெட்

நிதானமாக ரன் குவித்து வந்த தினேஷ் கார்த்திக் 44 ரன்கள் இருந்த போது, தோனி போன்றே தவறான LBW அவுட்டால் வெளியேறினார். இதனால், இந்தியா 205 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து மோசமான நிலையை அடைந்தது.

நீண்ட போராட்டம்

நீண்ட போராட்டம்

இந்தியா விக்கெட்களை இழந்ததால், கடைசி வரை நீண்ட ஆட்டம் ஜடேஜாவை நம்பி திரும்பியது. கடைசி ஓவரில் 7 ரன்கள் கிடைத்தால் வெற்றி என்ற நிலையில், ஜடேஜா ஒரு பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் அவர் தூக்கி அடிக்க அதை கேட்ச் பிடித்த ஆப்கன், போட்டி டை ஆனதை பெரிய வெற்றி போல கொண்டாடியது.

சொல்லாமல் சொல்லிய தோனி

சொல்லாமல் சொல்லிய தோனி

ஐசிசி விதிகளின் படி அம்பயர் முடிவுகளை எதிர்த்து பேசுவது குற்றம் என்பதால், போட்டி முடிந்தவுடன் பேசிய தோனி, அம்பயர் முடிவுகள் பற்றி நாசூக்காக குத்திக் காட்டினார். இந்தியாவின் தோல்வி பற்றி பேசிய தோனி, "சில ரன் அவுட்கள் ஏற்பட்டது. அப்புறம், இரண்டு விஷயங்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஏனென்றால், எனக்கு அபராதம் விதிப்பதை விரும்பவில்லை" என இடித்துக் காட்டினார் தோனி. இனிமேலாவது, அம்பயர்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

Story first published: Wednesday, September 26, 2018, 13:59 [IST]
Other articles published on Sep 26, 2018
English summary
Dhoni is not happy about 2 wrong LBW decisions by Umpire during India Afghanistan match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X