முதுகுவலியால் அவதிப்படும் டோணி.. சிஎஸ்கேவின் அடுத்த போட்டியில் விளையாட மாட்டாரா?

Posted By:
முதுகு வலியால் அவதிப்படும் தோனி- வீடியோ

மொஹாலி: சென்னை அணியின் கேப்டன் டோணி அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியின் போது டோணி மோசமான முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு இப்போதும் மோசமான வலி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அடுத்த போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக வாட்சன் செயல்பட வாய்ப்பு உள்ளது. டோணிக்கு ஒரு போட்டிக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

வலி

வலி

இந்த போட்டியில் டோணி கீப்பிங் செய்த போதே அவருக்கு முதுகில் பிரச்சனை ஏற்பட்டது. அடிக்கடி இதனால் கஷ்டபட்டுக் கொண்டு இருந்தார். தசை பிடிப்பு காரணமாக இந்த முதுகு பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது. அவர் பேட்டிங் இறங்கிய போதும் இந்த பிரச்சனை இருந்தது. கடைசிவரை இதனுடன்தான் அவர் விளையாடினார்.

கஷ்டப்பட்டார்

கஷ்டப்பட்டார்

இந்த நிலையில் போட்டியின் பாதியில் மருத்துவர்கள் வந்து அவருக்கு உதவி செய்தார்கள். சென்னை அணியின் மருத்துவ குழு வந்து அவரை சோதனை செய்தார்கள். ஆனால் போட்டி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்ததால், அவர் ரிட்டையர் ஹர்ட் ஆகவில்லை. தொடர்ந்து கடைசிபந்து வரை அதிரடியாக விளையாடினார்.

விளையாடுவாரா

விளையாடுவாரா

இந்த நிலையில் டோணி அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ளது. அவருக்கு முதுகுவலி மிகவும் அதிகமாக இருப்பதால் அடுத்த போட்டியில் அவர் கலந்து கொள்வது சந்தேகம்தான் . அடுத்த போட்டி வெள்ளிக்கிழமை நடக்க உள்ளது. அதற்குள் இவர் உடல்நிலை சரியாகுமா என்று தெரியவில்லை.

பாதி வீரர்கள்

பாதி வீரர்கள்

ஏற்கனவே சென்னை அணியில் இருந்து கேதார் ஜாதவ் வெளியேறியுள்ளார். ரெய்னா இன்னும் ஒரு போட்டியில் விளையாட மாட்டார். லுங்கி சானி கிடி, அவரது தந்தை மரணத்திற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். டு பிளசிஸ் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் டோணியும் அணியைவிட்டு சென்றால், சென்னை மிகவும் மோசமான நிலையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Dhoni may not play in next IPL match due to the back injury.
Story first published: Monday, April 16, 2018, 13:41 [IST]
Other articles published on Apr 16, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற