பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட டோணி.. சென்னையில் சிஎஸ்கே அதிரடி பயிற்சி- வீடியோ

Posted By:
பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட டோணி..வீடியோ

சென்னை: ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்கி இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இரண்டு வருடங்களுக்கு பின் சென்னை அணி மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பி இருக்கிறது. சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் டோணி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அஸ்வினை தவிர முக்கியமான வீரர்கள் எல்லோரும் சென்னை அணிக்கு திரும்பிவிட்டார்கள். நேற்று எல்லா வீரர்களும் சென்னைக்கு வந்து உள்ளார்கள்.

25 வீரர்கள்

25 வீரர்கள்

சென்னை அணி மிகவும் வயதான வீரர்களை மட்டுமே எடுத்து வந்தது. ஆனால் இரண்டாம் நாள் கடைசியில் இளம் வீரர்களை எடுத்து சென்னை அணி அதை ஈடுகட்டியது. சென்னை அணிக்கு தேவையான 25 வீரர்களும் தற்போது அணியில் இருக்கிறார்கள்.

கலவையான வீரர்கள்

கலவையான வீரர்கள்

சென்னை அணியில் மொத்தம் 10 ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். முதலில் சென்னை அணியில் சரியான பவுலிங் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் கடைசியில் அதுவும் சரி செய்யப்பட்டது. சென்னை அணியில் 9 வீரர்கள் பவுலிங் செய்வார்கள். இது இல்லாமல் மேலே இருக்க கூடிய நபர்களும் பவுலிங் செய்ய கூடியவர்கள். அதேபோல் பேட்டிங் ஆர்டரும் சென்னையில் அணியில் சிறப்பாக இருக்கிறது.

சென்னை அணி விவரம்

கேதார் ஜாதவ், ஷேன் வாட்சன், மிட்சல் சாண்டர், தீபக் சாஹர், கனிஷ்க் சேத், ரெய்னா, டோணி, முரளி விஜய், டியூ பிளசிஸ், அம்பதி ராயுடு, சாம் பில்லிங்ஸ், ஜெகதீசன் நாராயண், பிராவோ, ஜடேஜா, துருவ் ஷோரி, சிட்ஸ் சர்மா, சைத்தானியா பிஸ்நோய், கரன் சர்மா, ஷரத்துல் தாக்குர், ஹர்பஜன் சிங், மார்க் வுட், முகமது இம்ரான் தாஹிர், ஆசிப் கே எம், லுங்கி சாணி கிடி, மோனு சிங் என சென்னை அணி மிகவும் வலுவாக இருக்கிறது.

ஹர்பஜன்

சென்னை அணிக்கு புதிதாக வந்து இருக்கும் ஹர்பஜன் சிங் நேற்று சென்னை வந்து பயிற்சியை தொடங்கினார். 2 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரது குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். அஸ்வினுக்கு பதில் இவர் ஸ்பின் பவுலராக இருப்பார்.

ஆசிப் கேஎம்

சென்னையில் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கும் கேரளா வீரர் ஆசிப் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். இவர் டோணியிடம் முக்கியமான ஆலோசனைகளை பெற்றார். 40 லட்சம் கொடுத்து ஆசிப் கேஎம் ஏலம் எடுக்கப்பட்டார். கேரளாவை சேர்ந்த இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இதற்கு முன் இவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை.

ரெய்னா பயிற்சி

அதேபோல் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சின்ன தல ரெய்னாவும் திரும்பி இருக்கிறார். மேலும் ஜடேஜா, அணியின் பயிற்சியாளர்கள் ஆகியோரும் சென்னைக்கு பயிற்சிக்காக வந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டோணி சிக்ஸ்

இதில் டோணி பயிற்சியின் போது அடித்த சிக்ஸ் ஒன்று வைரல் ஆகியுள்ளது. சென்னையின் டிவிட்டர் பக்கம் ''பார்க்கிங்கில் இருக்கும் பந்தை எடுத்து வாருங்கள்'' என்று கெத்தாக டிவிட் செய்து இருக்கிறார்கள்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Dhoni and other CSKians starts practice in Chennai stadium for IPL 2018 . CSK took Dhoni, Vijay, Lungi , Raina, Jadeja, Bravo, Faf, Kedar, Rayudu, Karn, Tahir, Thakur, Santner, Watson, Jagadeesan, Chahar, Asif, Wood, Shorey, Kanish ,Billings, Bhajji, Bishoni, Monu, Kshitiz.
Story first published: Friday, March 23, 2018, 12:42 [IST]
Other articles published on Mar 23, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற