வயசாகிடுச்சு.. டெஸ்ட் பிளேயர்தான் பாஸ்.. ஆனாலும் அவர் டோணி.. தல கற்றுக்கொடுத்த 5 விஷயங்கள்!

Posted By:
ஐபிஎல் 2018, நேற்றைய போட்டியில் மீண்டும் பார்முக்கு வந்த தோனி- வீடியோ

மொஹாலி: ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் டோணி மாஸ் ஆட்டம் ஆடி இருக்கிறார். சென்னை அணி தோல்வி அடைந்ததை கூட பற்றி கவலைப்படாமல் டோணியின் கம்பேக்கை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

டோணி எதுக்கு இன்னும் டீம்ல இருக்கார், பிராவோவை வச்சு காலம் தள்ளுறார் என ஐபிஎல் போட்டியில் இவர் மீது கோடிக்கணக்கில் விமர்சனம் இருந்தது. எல்லாவற்றையும், நேற்று அடித்த ஹெலிகாப்டர் சிக்ஸர்கள் மூலம் உடைத்து தள்ளினார்.

சென்னை ரசிகர்கள் பைத்தியாகாரத்தனமாக டோணி மீது கொண்டு இருக்கும் காதலுக்கு என்ன காரணம் என்பதை நேற்றைய போட்டியில் முதுகுவலியுடன் ஆடி அவர் நிரூபித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் இன்னும் எத்தனை போட்டிகள் நடந்தாலும், டோணி நேற்று ஆடியது கிளாஸ்!

நிதானமாக இருப்பது

நிதானமாக இருப்பது

டோணிக்கு எப்போது இருக்கும் பழக்கம்தான் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. போட்டி எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருந்தாலும், முதலில் தனக்காக நேரம் வரும் வரை அவர் காத்திருப்பார். வந்த உடன் அவசர அவசரமாக ஆடாமல், பொறுமையாக ஆட்டத்தை தன்னுடைய கையில் கொண்டு வருவார். வாழ்க்கையில் பலருக்கும் இல்லாத நிதானம், அவரிடம் எல்லா போட்டியிலும் இருக்கும். அணியை கொஞ்சம் கொஞ்சமாக நல்ல திசையில் வழிநடத்தி செல்வார்.

கூல் பாஸ்

கூல் பாஸ்

அதேபோல் எவ்வளவு மோசமான நேரத்திலும் முகத்தில் எந்த விதமான வேறுபாடும் காட்ட மாட்டார். நேற்று போட்டியில் 18 பந்துகளில் 50 ரன் தேவை என்று இருந்த சமயத்தில் கூட அவர் அதை முகத்தில் கொஞ்சம் கூட காட்டிக் கொள்ளவேயில்லை. அதேபோல் தனக்கு மோசமான முதுகு வலி இருந்ததையும் வெளியே காட்டிக் கொண்டு இருக்கவில்லை. அமைதியாக இதுபோல இருப்பது, இயல்பு வாழ்க்கையிலும் உதவும்.

தேவைப்பட்டால் அதிரடி

தேவைப்பட்டால் அதிரடி

சரியாக நேற்று மூன்று ஓவருக்கு 50 ரன்கள் தேவைப்பட்ட போது டோணி அதிரடி காட்ட தொடங்கினார். சிக்ஸ், பவுண்டரி என்று பழைய பாட்ஷா டோணி நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் வெளியே வந்தார். எல்லா ஓவரில் பவுலர்களை வைத்து செய்தார். கடைசி ஓவரில் 20 ரன்னுக்கும் குறைவாக அடிக்க வேண்டும் என்ற நிலைக்கு கொண்டு வந்தார். பொறுமையாக களத்தை உணர்ந்த கொண்டு பின்தான் அவர் ருத்ர தாண்டவம் ஆடினார். உங்கள் அலுவலகம் தொடங்கி கல்லூரி வரை களத்தை நன்றாக ஆய்வு செய்துவிட்டு அடித்து ஆடினால் வெற்றிதான்.

தோல்வி

தோல்வி

எவ்வளவு கஷ்டப்பட்டும் கடைசியில் சென்னை நேற்று தோல்வி அடைந்தது. அப்போது பேட்டியின் போது, முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல், பஞ்சாப் அணி மிகவும் நன்றாக விளையாடியது என்று கூறினார். அதோடு, சென்னை அணி தோல்வி அடைந்ததை குறித்து பெரிதாக வருத்தப்படாமல் இருந்தார். அவர் வெற்றியின் போதும் இப்படித்தான் இருந்திருப்பார். எந்த விதமான உணர்ச்சிகளையும் மூளைக்குள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் அவர் குணம், எல்லோருக்கும் உதவும்.

போய்கிட்டே இருங்க பாஸ்

போய்கிட்டே இருங்க பாஸ்

நேற்றைய ஐபிஎல் போட்டிதான் இந்த தொடரில் இதுவரை டோணிக்கு மிகவும் சிறந்த போட்டி. 5 சிக்ஸ், 6 பவுண்டரி என்று 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். இவ்வளவு நாள் அவரை பார்த்து சிலர் டெஸ்ட் வீரர், பார்ம் இல்லை, டோணி கதை முடிஞ்சிட்டு பாஸ் என்று கூச்சலிட்டுக் கொண்டு இருந்தனர். இந்த போட்டி வேண்டுமானால், சென்னைக்கான போட்டியாக இல்லாமல் இருக்கலாம்... ஆனால் இது டோணிக்கான போட்டி!

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Dhoni's best comeback for CSK in IPL 2018.
Story first published: Monday, April 16, 2018, 9:44 [IST]
Other articles published on Apr 16, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற