கடவுள் எனக்கு அதிக சக்தியை கொடுத்து இருக்கிறார்.. ஆனாலும் கஷ்டமாக இருந்தது.. தல டோணி வருத்தம்

Posted By:
சென்னை அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனி பேட்டி- வீடியோ

மொஹாலி: நேற்றைய போட்டியில் சென்னை அணியின் தோல்வி குறித்து கேப்டன் டோணி பேட்டியளித்துள்ளார். அதேபோல் தனக்கு ஏற்பட்ட முதுகுவலி குறித்தும் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது. பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் அந்த அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார்.

கடைசி நேரத்தில் ஏன் ஜடேஜாவை களமிறக்கினார்கள் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் நினைத்த மாதிரி இல்லை

நாங்கள் நினைத்த மாதிரி இல்லை

அவர் தனது பேட்டியில் ''போட்டிக்கு நடுவே ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் கைவிட்டு போனது. 15 ஓவர்களில் ஆட்டத்தை எங்கள் வசம் கொண்டு வர முயற்சி செய்தோம். ஆனால் அந்த சமயங்களில், சூழ்நிலை எங்களுக்கு ஏற்றபடி இல்லை. அது போட்டி முடிவிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.'' என்றுள்ளார்.

ஜடேஜா வாய்ப்பு

ஜடேஜா வாய்ப்பு

நேற்றைய போட்டியில் ஜடேஜாவை களமிறக்க முக்கிய காரணம் இருக்கிறது. அவர் தன்னை நிரூபிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். நேற்று அதற்காகத்தான் அவரை களத்தில் இறக்கினோம். ஆனால் நேற்று அவர் விளையாட சரியான சூழ்நிலை அமையவில்லை. நேற்றைய நாள் அவருக்கானதாக இல்லை. அவர் தன்னை ஒருநாள் நிரூபிப்பார், என்றார்.

சூப்பர் பாஸ்

சூப்பர் பாஸ்

அதேபோல் அவர் பஞ்சாப் அணியின் விளையாட்டையும் பாராட்டினார். அதில் ''பஞ்சாப் அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. முக்கியமாக முஜீபுர் ரஹ்மான் மிகவும் அபாரமாக பந்து வீசினார். முக்கியமான நேரத்தில் அவர் ரன்னை கட்டுப்படுத்தியதுதான் எங்கள் தோல்விக்கு காரணம். நாங்கள் சில விஷயங்களை மாற்ற வேண்டியுள்ளது'' என்றுள்ளார்.

பக்கம்

பக்கம்

முதுகுவலி பற்றி பேசிய அவர் ''கடவுள் எனக்கு நல்ல சக்தியை கொடுத்து இருக்கிறார். நான் நேற்று என்னுடைய முதுகை அதிகம் பயன்படுத்தவில்லை. கடவுள் என் கைகளுக்கு சரியான பலம் கொடுத்துள்ளார். அதுவே நேற்று ஆட போதுமானதாக இருந்தது. ஆனாலும் நேற்று ஏற்பட்ட வலி மிகவும் கஷ்டமாக இருந்தது'' என்று வருத்தமாக தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Dhoni speaks up about CSK loss against KXIP in IPL 2018.
Story first published: Monday, April 16, 2018, 10:32 [IST]
Other articles published on Apr 16, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற