For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த தமிழனும் ஆளப்போறான்.. கொல்கத்தா கேப்டன் ஆனார் திக்.. திக்.. தினேஷ் கார்த்திக்..!

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar

Recommended Video

கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்- வீடியோ

பெங்களூர்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அஸ்வின் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தினேஷ் கார்த்திக் முதல்முறையாக கொல்கத்தா அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இவர் குஜராத் அணிக்காக விளையாடி இருக்கிறார்.

இவரது கேப்டன் அறிவிப்பே மிகவும் வித்தியாசமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பீரை எடுக்கவில்லை

கம்பீரை எடுக்கவில்லை

ஐபிஎல் ஏலத்தில் கவுதம் கம்பீர் 2.80 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.டெல்லி அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. டெல்லி அவர் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த ஊர்

சொந்த ஊர்

இவை இரண்டு முறை கொல்கத்தா அணிக்காக கோப்பை வாங்கி கொடுத்து இருக்கிறார். அணியில் எடுக்கப்படாமல் போனதை புரிந்து கொள்ள முடிகிறது என்று கம்பீர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அந்த அணிக்கு இவர் கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.

போட்டி நிலவுகிறது

இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு கேப்டன் யார் என்று போட்டி நிலவியது. ராபின் உத்தப்பா, தினேஷ் இருவரில் யாரவது ஒருவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. வெளிநாட்டு வீரர்களும் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

டிவிட்டர் வைரல்

இந்த நிலையில் கொல்கத்தா கேப்டன் யார் என்று கண்டுபிடியுங்கள் என்று போட்டி கூட நடத்தினார்கள். இதற்காக அந்த அணி நிர்வாகம் டிவிட் செய்து இருந்தது. யார் கேப்டனாக வருவார்கள் என்று பலர் கணித்து இருந்தார்கள்.

தினேஷ் கார்த்திக்

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் அணியின் கேப்டனாக தேர்வாகி இருக்கிறார். உத்தப்பா துணை கேப்டனாக தேர்வாகி உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மிக்க நன்றி

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் ''கொல்கத்தா அணி இதுவரை மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறது. இப்படிப்பட்ட அணிக்கு தலைமையேற்பது சந்தோசத்தை கொடுக்கிறது. அணியில் நிறைய நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் நன்றி'' என்றுள்ளார்.

ஆளப்போறான் தமிழன்

முன்பே அஸ்வின்தான் பஞ்சாப் அணியின் கேப்டனாகஅஸ்வின் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் அணி டிவிட்டரில் எங்கள் புதிய கேப்டன் என்று டிவிட் செய்து இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் இரண்டு தமிழக வீரர்கள் தற்போது கேப்டனாக இருக்கிறார்கள்.

Story first published: Sunday, March 4, 2018, 11:17 [IST]
Other articles published on Mar 4, 2018
English summary
Dinesh Karthik named as the KKR captain for IPL 2018.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X