ரொம்ப கஷ்டமான பணி.. இருந்தும் வெற்றிக்கு காரணம் என்ன? மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்

டிரிண்டாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட கார்த்திக், 3 பவுண்டரிகள், 2 சிக்சர்களை விளாசி 41 ரன்களை விளாசினார்.

160 ரன்களை கூட தாண்டாது என்று நினைத்தேன். ஆனால் தினேஷ் கார்த்திக் 190 ரன்களை கொண்டு சேர்த்து விட்டதாக கேப்டன் ரோகித் சர்மாவும் பாராட்டு தெரிவித்தார்.

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி.. பிளேயிங் லெவனில் குழப்பம்.. கோலி இடம் யாருக்கு?இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி.. பிளேயிங் லெவனில் குழப்பம்.. கோலி இடம் யாருக்கு?

கடினமான பணி

கடினமான பணி

இந்த நிலையில் ஆட்ட நாயகன் விருது வென்ற கார்த்திக் பேசியதாவது, ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. ஷாட்களை ஆடுவதும் சிரமம் தான். பினிஷர் ரோலில், முதலில் ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்ட, அதற்கு ஏற்றார் போல் எந்த ஷாட்களை ஆடினால் சரியானதாக இருக்கும் என்று யோசித்து ஆட வேண்டும்

சிக்கலான வேலை

சிக்கலான வேலை

பினிஷர் ரோலை எஞ்சாய் செய்கிறேன். ஆனால் இது கொஞ்சம் சிக்கலான வேலை. உங்களால் அனைத்து போட்டிகளிலும் ரன் குவிக்க முடியாது. சில சமயம், அதிரடியாக ஆட முயற்சித்து விக்கெட்டை இழக்க நேரிடும். இதனால் உங்களால் தொடர்ந்து ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

காரணம் யார்?

காரணம் யார்?

இந்த நிலையில் தான் உங்களுக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு மிகவும் முக்கியம். எனக்கு இவ்விருவரிடம் இருந்து நிறைய ஆதரவு கிடைக்கிறது. இல்லையென்றால் என்னால் சுதந்திரமாக விளையாடி இருக்க முடியாது. பினிஷர் ரோல் செய்வதற்கு பயிற்சி, ஆடுகளம் குறித்து அறிவு ஆகியவை இருந்தால் மட்டுமே வெற்றி காண முடியும்.

பதிலடி தந்த கார்த்திக்

பதிலடி தந்த கார்த்திக்

இங்கிலாந்துக்கு எதிராக கடைசியாக இந்தியா விளையாடிய 3 டி20 போட்டியிலும் கார்த்திக் சரிவர விளையாடவில்லை. இதனால் அவரது இடத்துக்கு ஆபத்து வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் டிராவிட், ரோகித் கூட்டணி கொடுத்த ஆதரவால், எவ்வித அச்சமும் இன்றி விளையாடியதாக தற்போது கார்த்திக் கூறி இருக்கிறார். இதனால் உலகக்கோப்பை டி20 போட்டியில் கார்த்திக் தனது இடத்தை உறுதி செய்துவிட்டார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dinesh Karthik opens up about his finishing role and support from captain ரொம்ப கஷ்டமான பணி.. இருந்தும் வெற்றிக்கு காரணம் என்ன? மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்
Story first published: Saturday, July 30, 2022, 17:22 [IST]
Other articles published on Jul 30, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X