For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வானிலையில நல்ல மாற்றம் ஏற்பட்டுருக்கு... சேஸிங்ல சிறப்பா விளையாட முடியுது... சச்சின் விளக்கம்

மும்பை : யூஏஇயில் கடந்த 6 வாரங்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் அங்கு வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களில் சேஸிங் செய்பவர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சில போட்டிகளில் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமே தற்போதைய சூழலுக்கு காரணம் என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

பிளே-ஆப் சுற்று

பிளே-ஆப் சுற்று

கடந்த செப்டம்பர் 19ம் தேதி யூஏஇயில் ஐபிஎல் 2020 தொடர் துவங்கி தற்போது பிளே-ஆப் சுற்று நடைபெற்று வருகிறது. நேற்றைய தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கொண்டுள்ளது.

முன்னாள் வீரர் சச்சின் விளக்கம்

முன்னாள் வீரர் சச்சின் விளக்கம்

கடந்த 6 வாரங்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுவரும் சூழலில் அதிகப்படியான வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் ஆரம்பத்தில் போட்டிகளை எதிர்கொள்ள அனைத்து அணிகளும் திணறின. இந்நிலையில் தற்போது அங்கு வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

சச்சின் வீடியோ வெளியீடு

சச்சின் வீடியோ வெளியீடு

வெப்பநிலை சராசரியாக 6 டிகிரிகள் குறைந்துள்ளதாக சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். துபாய் மற்றும் அபுதாபியில் சேஸிங் செய்யும் அணிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் கடந்த சில தினங்களில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பௌலர்கள் சிறப்பான பௌலிங்

பௌலர்கள் சிறப்பான பௌலிங்

சூரியன் சீக்கிரத்தில் மறைவது உள்ளிட்ட காரணங்களால் பிட்சிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்மூலம் பௌலர்கள் சிறப்பான பிட்ச்சை கொண்டு பௌலிங் செய்ய முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குளிர்ச்சியான சூழலும் பௌலர்களுக்கு சிறப்பாக உதவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, November 6, 2020, 11:36 [IST]
Other articles published on Nov 6, 2020
English summary
The dew is a factor due to the cooler climate which effectively means little help for bowlers -Sacin
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X