For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படியா அவுட் ஆவாங்க.. 118 வருட மோசமான ரெக்கார்டை உடைத்த இங்கிலாந்து கேப்டன்!

மான்செஸ்டர் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் மிக மோசமான சாதனையை செய்துள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடந்து வருகிறது. அந்தப் போட்டியில் கேப்டன் ஜோ ரூட் ரன் அவுட் ஆகி 118 வருட மோசமான சாதனையை முறியடித்துள்ளார்.

விக்கெட்டே எடுக்காமல் 50 ஓவர்.. பரிதாப வெ.இண்டீஸ் வீரர்.. இங்கிலாந்தை காப்பாற்றிய போப்!விக்கெட்டே எடுக்காமல் 50 ஓவர்.. பரிதாப வெ.இண்டீஸ் வீரர்.. இங்கிலாந்தை காப்பாற்றிய போப்!

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் டொமினிக் ஸிப்லி ஐந்தே பந்துகளில் டக் அவுட் ஆனார். அடுத்து கேப்டன் ஜோ ரூட் களமிறங்கினார்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

ஜோ ரூட் கடந்த சில போட்டிகளில் சரியாக ரன் குவிக்காத நிலையில் அவர் பெரிய இன்னிங்க்ஸ் ஆட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். துவக்க வீரர் பர்ன்ஸ் உடன் இணைந்து ஜோ ரூட் மிகவும் நிதான ஆட்டம் ஆடினார்.

ரன் அவுட்

ரன் அவுட்

ஜோ ரூட் 59 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். தவறான கணிப்பால் ரன் ஓடிய அவர், ராஸ்டன் சேஸ் த்ரோவில் ஆட்டமிழந்தார். இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் இன்னிங்க்ஸிலும் ஜோ ரூட் ஆட்டமிழந்து இருந்தார்.

இரண்டாவது டெஸ்டில் என்ன நடந்தது?

இரண்டாவது டெஸ்டில் என்ன நடந்தது?

இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி வேகமாக ரன் குவிக்க முயற்சி செய்தது. அப்போது பென் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து ஆடி வந்தார் ஜோ ரூட். அப்போது அதிரடியாக ஆடி வந்த பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை காப்பாற்ற தான் ரன் அவுட் ஆனார்.

ஆறு முறை

ஆறு முறை

தொடர்ந்து இரண்டு இன்னிங்க்ஸ்களில் ரன் அவுட் ஆனதன் மூலம் பல்வேறு மோசமான சாதனைகளை செய்துள்ளார் ஜோ ரூட். அவரது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த இரண்டு ரன் அவுட்களையும் சேர்த்து இதுவரை ஆறு முறை ரன் அவுட் ஆகி உள்ளார்.

மூன்றாம் இடத்தில் ரூட்

மூன்றாம் இடத்தில் ரூட்

டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட் ஆன இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் முதல் இரு இடங்களில் ஜெப்ரி பாய்காட் மற்றும் மாட் பிரியர் உள்ளனர். அவர்கள் இருவரும் ஏழு முறை ரன் அவுட் ஆகி உள்ளனர். ஜோ ரூட் ஆறு முறை ரன் அவுட் ஆகி மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

கேப்டன்களில் அதிக ரன் அவுட்

கேப்டன்களில் அதிக ரன் அவுட்

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக அதிக முறை ரன் அவுட் ஆனவர்கள் பட்டியலில் ஆர்ச்சி மெக்கிளாரனை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆர்ச்சி மெக்கிளாரன் 1902இல் மூன்று முறை ரன் அவுட் ஆகி இருந்தார்.

118 வருட மோசமான சாதனை

118 வருட மோசமான சாதனை

அதை முறியடித்துள்ள ஜோ ரூட் நான்கு முறை ரன் அவுட் ஆகி இருக்கிறார். சுமார் 118 வருட மோசமான சாதனையை செய்த இங்கிலாந்து கேப்டன் என்ற பெயரை பெற்றுள்ளார் ஜோ ரூட். அவரின் மோசமான பார்ம் இங்கிலாந்து அணியை பாதித்து வரும் நிலையில், மோசமான சாதனைகளையும் செய்துள்ளார்.

Story first published: Saturday, July 25, 2020, 14:10 [IST]
Other articles published on Jul 25, 2020
English summary
ENG vs WI : Joe Root broke 118 year old poor record in test matches with this consecutive run outs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X