For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காபிரியேலை வெஸ்ட் இண்டீஸே கொண்டாடுகிறது.. ஏன் தெரியுமா?

செயின்ட் லூசியா: ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார் காபிரியேல்.

இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

Gabriel slams more wickets in a Test match


இரு அணிகளுக்குகிடையேயான இரண்டாவது போட்டி கிராஸ் ஐலெட் தீவில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 253 ரன்களும் ,இரண்டாவது இன்னிங்சில் 342 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தது. இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் காபிரியேல் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்களும் இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்களும் வீழ்த்தினார்.

மொத்தம் 13 விக்கெட்களை இப்போட்டியில் கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இடத்தில் மைக்கேல் ஹோல்டிங் 14 விக்கெட்களும் மற்றும் இரண்டாவது இடத்தில் வால்ஷ் 13 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர்.

மேலும் காபிரியேல் டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியுள்ளார். காபிரியேலின் அதிரடி சாதனையை வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Story first published: Tuesday, June 19, 2018, 8:31 [IST]
Other articles published on Jun 19, 2018
English summary
West Indies bowler Gabriel has taken 13 wickets in test second match against Sri Lanka.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X