For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உம்ரான் மாலிக் மீது வைக்கப்படும் விமர்சனம்.. பதிலடி தந்த கம்பீர்.. இவர் தான் அணிக்கு தேவை என கருத்து

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் மணிக்கு150 கிலோ மீட்டருக்கு வேகத்திற்கு அதிகமாக பந்து வீசக்கூடிய திறமை படைத்த வீரராக உம்ரான் மாலிக் திகழ்கிறார்.
இதனால் உம்ரான் மாலிக் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதைப் போன்று தமக்கு கிடைத்த வாய்ப்பில் உம்ரான் மாலிக் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உம்ரான் மாலிக் இதுவரை 6 இன்னிங்ஸில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

மொத்தமாக 288 பந்துகளை வீசி 303 ரன்களை கொடுத்திருக்கிறார். விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரராக உம்ரான் மாலிக் திகழ்ந்தாலும் ரன்களை கொஞ்சம் அதிகமாக கொடுப்பதாக அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.

எல்லாம் பொய்யா கோபால்.. உம்ரான் மாலிக்கின் சாதனையில் குளறுபடி.. உண்மை தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்! எல்லாம் பொய்யா கோபால்.. உம்ரான் மாலிக்கின் சாதனையில் குளறுபடி.. உண்மை தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்!

 அதையும் கவனியங்கள்

அதையும் கவனியங்கள்

இந்த விமர்சனத்திற்கு பதிலடி தந்துள்ள கவுதம் கம்பீர், ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர் தான் தேவை என்று தெரிவித்துள்ளார். உம்ரான் மாலிக் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். அவர் அதிக ரன்களை கொடுப்பதாக சிலர் விமர்சனம் வைக்கிறார்கள். ஆனால் அவர் விக்கெட்டையும் அதிகமாக எடுக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்த பயனும் இல்லை

எந்த பயனும் இல்லை

விக்கெட்டுகளை எடுக்காமல் ரன்களை மட்டும் கட்டுப்படுத்தி எந்த பயனும் இல்லை. நாம் பல போட்டிகளில் பார்த்திருக்கிறோம். முதல் 30 ஓவர்களில் விக்கெட்டுகள் விழாமல் அடுத்த 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 360 ரன்களை எல்லாம் அணிகள் எட்டுகின்றன. அப்போது முதல் 30 ஓவர்களில் ரன்ளை கட்டுப்படுத்தி என்ன பயன் இருக்கிறது. இதனால் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே எடுக்கக்கூடிய வீரர்கள் உங்களுக்கு தேவை. அந்த பணியை தான் உம்ரான் மாலிக் செய்து வருகிறார்.

தொடர்ந்து பயன்படுத்துங்கள்

தொடர்ந்து பயன்படுத்துங்கள்

தற்போது வெறும் ஏழு போட்டிகளில் தான் அவர் விளையாடி இருக்கிறார்.இளம் வீரராக உம்ரன் மாலிக் இருக்கிறார். தனக்கு கிடைக்கும் அனுபவத்தை வைத்து அவர் மேன்மேலும் வளர தான் செய்வாரே தவிர ,அவர் மோசமாக செயல்பட வாய்ப்பு இருக்காது .இதன் காரணமாக உம்ரன் மாலிக்கை தொடர்ந்து அணி நிர்வாகம் பயன்படுத்த வேண்டும். இதேபோன்று முகமது சிராஜும் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வீரராக இருக்கிறார். சில சமயங்களில் அவர் ஓவர்களில் ரன் போகலாம்.

 கம்பீர் அறிவுரை

கம்பீர் அறிவுரை

என்னை கேட்டால் தற்போது இருக்கிற பந்துவீச்சாளர்கள் ஏதேனும் ஒரு போட்டியில் 350 ரன்களை கூட விட்டுக் கொடுக்கலாம். பேட்ஸ்மேனாகிய நீங்கள் அந்த ஆட்டத்தில் விளையாட வேண்டும். மற்ற போட்டிகளில் எல்லாம் இந்த பந்துவீச்சு படை அதிக அளவில் விக்கெட்டுகளை எடுக்கிறது. இது உண்மையிலேயே இந்திய அணிக்கு நல்ல விஷயமாகும். என்னை பொறுத்தவரை உம்ரான் மாலிக் இந்த விமர்சனங்களை எல்லாம் கேட்காமல் தொடர்ந்து அவருடைய பந்துவீச்சில் கவனம் செலுத்தி விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.

Story first published: Friday, January 13, 2023, 13:10 [IST]
Other articles published on Jan 13, 2023
English summary
Gautam Gambhir hit backs the critics of umran malik and gives full support
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X