தன்னோட வலியை மறைச்சு, பேட்டை வச்சி பேசியிருக்காரு விஹாரி... பார்த்திவ் படேல் பாராட்டு

டெல்லி : இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வின் நிதானமாக விளையாடி போட்டியை டிரா செய்தனர்.

இதையடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிள் இந்த தொடரில் சமநிலையில் உள்ளன. 4வது போட்டி நாளை மறுதினம் பிரிஸ்பேனில் துவங்கவுள்ளது.

உங்களுக்கு வேறு பிழைப்பே இல்லையா? விஸ்வரூபம் எடுக்கும் ஸ்மித் விவகாரம்.. தீவிரமாகும் பிரச்சனை!

இந்நிலையில், தன்னுடைய காயம் தந்த வலியை மறைத்துக் கொண்டு தன்னுடைய பேட்டை கொண்டு விஹாரி பேசியுள்ளதாக முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டிரா ஆன 3வது போட்டி

டிரா ஆன 3வது போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து முடிந்துள்ளது. 407 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய நிலையில், இந்த போட்டி டிரா ஆனது. ரவி அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி இருவரும் நிதானமாக விளையாடி போட்டியை டிரா செய்தனர்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

இந்த போட்டியின்போது காயத்தால் அவதியுற்ற நிலையிலும் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் மைதானத்தில் இருந்து பொறுமையாக விளையாடினார் ஹனுமா விஹாரி. போட்டி முடிந்ததும் அவர் தன்னுடைய பேட்டின் உதவியுடன்தான் பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பார்த்திவ் படேல் பாராட்டு

பார்த்திவ் படேல் பாராட்டு

இந்நிலையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 5வது நாள் போட்டியின் போது தன்னுடைய வலியை சிரிப்பால் மறைத்துக் கொண்டு ஹனுமா விஹாரி தன்னுடைய பேட்டை பேச வைத்ததாக முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

போட்டி டிரா ஆக உதவி

போட்டி டிரா ஆக உதவி

மேலும் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும் பார்த்திவ் படேல் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த போட்டியில் ரிஷப் பந்த், புஜாரா சரியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தநிலையில் களமிறங்கிய அஸ்வின் மற்றும் விஹாரி போட்டி டிரா ஆக சிறப்பாக உதவி புரிந்தனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Hanuma Vihari showed character and grabbed the opportunity with both hands -Parthiv
Story first published: Wednesday, January 13, 2021, 15:25 [IST]
Other articles published on Jan 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X