For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த ரசிகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.. எங்க போனாலும் வராங்க...!! புலம்பி தள்ளும் அதிரடி வீரர்

லண்டன்: எங்கு போனாலும் இந்த ரசிகர்களின் தொல்லை ரொம்ப அதிகமாகி விட்டது என்று ஹிட் மேன் ரோகித் சர்மா புலம்பி தள்ளுகிறார்.

கிரிக்கெட் வீரர்கள் என்றால் மிக பிரபலம். அவர்களை காண குவியும் ரசிகர்கள். கைகளை குலுக்கியும், கட்டியணைத்தும் , செல்பி எடுத்தும் மகிழ்வர். அவர்களை கண்டு கிரிக்கெட் வீரர்களும் உற்சாகம் அடைவர்.

Hitman rohit sharma unhappy when the fans are so overwhelmed

இப்போது ட்விட்டர், பேஸ்புக் , வாட்ஸ் அப் என்று சமூகவலைத்தள காலம் என்பதால் ரசிகர்கள் பலரும் வந்து கருத்து சொல்கின்றனர். பிரபல விளையாட்டு வீரர்களும் அதனை கவனமாக கையாள்கின்றனர்.

இந்நிலையில், ரசிகர்கள் என்றால் தொல்லை என்று பொருள்படும்படி, ஹிட் மேன் ரோகித் சர்மா கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது: ரசிகர்கள் கருத்துக்கு ஒவ்வொரு நாளும் செவிமடுப்பது, பவ்யமாக அணுகுவது என்பது எனக்கு இப்போது பழக்கமாகிவிட்டது.

விட்டை விட்டு வெளியே வந்தால் போதும் முதலில் ஹலோவில் தான் ஆரம்பிக்கும். பின்னர் எனது ஆட்ட திறனை விமர்சிப்பர். இந்த பந்தை அப்படி ஆடியிருக்க வேண்டும், இவ்வளவு ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்வர்.

3 டி பிளேயர் என்று விமர்சித்த ராயுடுவுக்கு விஜய் சங்கர் பதிலடி... இவ்வளவு நாள் கழிச்சு.. பலே... பலே...!! 3 டி பிளேயர் என்று விமர்சித்த ராயுடுவுக்கு விஜய் சங்கர் பதிலடி... இவ்வளவு நாள் கழிச்சு.. பலே... பலே...!!

பிறகு அவர் கவர் டிரைவை நீங்கள் கொஞ்சம் இப்படி ஆடலாம், நேர் ட்ரைவை இன்னும் கொஞ்சம் நீங்கள் மேம்படுத்த வேண்டும் என்பார்கள், நான் என்ன செய்வேன் கேட்டுக் கொண்டு நகர்வேன்.

ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் என்னால் ரன்களை எடுக்க முடியாது. சமீபத்தில் ஒருவர் என்னிடம் வந்து நான் 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு 130 சிக்சர்கள் அடித்துள்ளேன். ஆக போகும் இடம் எல்லாம் ரசிகர்களை எதிர்கொள்வது என்பது சாதாரண விஷயமாகி விட்டாலும், அவர்களை தொல்லைகள் தாங்க முடியாத நிலைமைகளும் ஏற்பட்டு இருக்கின்றன என்றார்.

Story first published: Sunday, May 26, 2019, 12:18 [IST]
Other articles published on May 26, 2019
English summary
Hitman rohit sharma unhappy when the fans are so overwhelmed.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X