For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 வருஷமா காத்திருக்கேன்… விளையாட சான்சே இல்லை..!! இந்த இளம் வீரருக்கு நேர்ந்த சம்பவம்

மும்பை: கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியும் நிரந்தர வாய்ப்பு இல்லாதது வருத்தமளிப்பதாக இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் வேதனை தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி தற்போது தயாராகி வருகிறது. அந்த அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

அந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப் பட்டது. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அருமையான வாய்ப்பு

அருமையான வாய்ப்பு

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது : இளம் வயதில் இந்திய அணிக்காக விளையாடுவது ஒரு அற்புத வாய்ப்பு.

போட்டி அதிகரிப்பு

போட்டி அதிகரிப்பு

ஆனால் நான் தற்போது என்ன நினைக்கிறேன் என்றால் இந்தத் தொடரில் எனக்கான போட்டி அதிகரித்துள்ளதாக நான் எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இந்த தொடர் மிகவும் கடினமானது.

தக்க வைப்பது அவசியம்

தக்க வைப்பது அவசியம்

இந்த தொடரில் சாஹல், குல்தீப், ஜடேஜா, கருணால் பாண்டியா மற்றும் ராகுல் சாகர் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதனால் எனது இடத்தை நான் தக்கவைத்துக்கொள்வது ரொம்ப அவசியம்.

விடா முயற்சி, சோதனை

விடா முயற்சி, சோதனை

அதற்காக ஒவ்வொரு நாளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனது கடின உழைப்புக்கும் என்னுடைய விடாமுயற்சிக்கும் இந்த தொடர் ஒரு சோதனை அமையவுள்ளது. 2 ஆண்டுகளாகியும் எனக்கு வாய்ப்பு அவ்வப்போது கிடைப்பதால் இந்த தொடரில் என்னை நிரூபிக்க உள்ளேன் என்று கூறினார்.

Story first published: Sunday, July 28, 2019, 11:47 [IST]
Other articles published on Jul 28, 2019
English summary
I have waited to enter in Indian squad almost 2 years says young player Washington sundar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X