For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னப்பா இது! ஆஸி. டெஸ்ட் வேற வருது.. 4 இந்திய வீரர்கள் தவிர ஒருத்தர் கூட டாப் 10ல இல்லையே!

Recommended Video

ஆஸி. டெஸ்ட் தொடருக்கு முன் பயமுறுத்தும் வீரர்கள் தரவரிசை

துபாய் : ஐசிசி டெஸ்ட் தரவரிசை நேற்று வெளியானது. அதில் விராட் கோலி தொடர்ந்து தன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.

இந்தியா அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.

இந்த நிலையில், தற்போது டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் எந்த இடங்களில் இருக்கிறார்கள் என்பதை காணலாம்.

கோலி முதல் இடம்

கோலி முதல் இடம்

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நீண்ட காலமாகவே கோலி முதல் இடத்தில் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் தடை பெற்ற பின் சில மாதங்கள் கழித்து கோலி முதல் இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய கோலி தொடர்ந்து தன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.

ஸ்மித்தை விட அதிகம்

ஸ்மித்தை விட அதிகம்

தற்போது கோலி 935 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் 910 புள்ளிகளுடன் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஏப்ரல் முதல் சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புஜாரா 6வது இடம்

புஜாரா 6வது இடம்

நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் நான்காம் இடத்திலும் இருக்கிறார்கள். இந்தியர்களில் கோலி தவிர்த்து புஜாரா மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளார். அவர் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

ஜடேஜா, அஸ்வின் மேலே

ஜடேஜா, அஸ்வின் மேலே

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜடேஜா ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர்கள் தவிர்த்து ஒரு இந்திய பந்துவீச்சாளர்கள் கூட முதல் இருபது இடங்களில் இடம் பெறவில்லை. டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா இரண்டாம் இடத்திலும், அஸ்வின் ஆறாம் இடத்திலும் இருக்கிறார்கள்.

4 வீரர்கள் மட்டுமே

4 வீரர்கள் மட்டுமே

இந்த தரவரிசை பட்டியலை பார்த்தால் சற்று பயமாகவே உள்ளது. இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் அணி என்றாலும், கோலி, புஜாரா, அஸ்வின், ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் தவிர ஒரு வீரர் கூட கடந்த சில மாதங்களில் பெரிய அளவில் சோபிக்கவில்லை அல்லது அதிக போட்டிகளில் ஆடவில்லை என்பது தெரிகிறது. இரண்டுமே அணிக்கு பெரும் பின்னடைவு தான்.

கவலை அளிக்கிறது

கவலை அளிக்கிறது

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் துவங்க உள்ள நிலையில் இந்த தரவரிசை இந்திய பந்துவீச்சாளர்களின் உண்மை நிலையை பிரதிபலிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. கவலை அளிப்பதாகவும் உள்ளது. இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு கொஞ்சம் ஓவராகவே பில்டப் கொடுக்கப்படுகிறது. இந்த தரவரிசையை பார்த்தால், அதற்கேற்ப அவர்கள் செயல்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Thursday, November 29, 2018, 13:50 [IST]
Other articles published on Nov 29, 2018
English summary
Ahead of Australia test series, Only 4 Indian players are in top 10 of ICC test ranking. Kohli maintain top spot, Ashwin gained in bowler rankings
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X