என்னமா பவுலிங் போடறாங்க!! 10 விக்கெட்டும் காலி.. ஆஸி.விடம் சரண்டர் ஆன இந்திய வீரர்கள்!

IND vs AUS 1st Odi| வார்னர் அதிரடி பேட்டிங்... இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா

மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங்கில் சொதப்பியது.

இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே பொறுப்பாக ஆடினர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலிய பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு கட்டுக் கோப்பாக இருந்தது. எந்த இடத்திலும் இந்திய அணியால் எளிதாக ரன் குவிக்க முடியவில்லை.

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

கேதார் ஜாதவ் நீக்கம்

கேதார் ஜாதவ் நீக்கம்

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய ஒருநாள் அணியில் வழக்கமாக இடம்பெறும் கேதார் ஜாதவ் நீக்கப்பட்டார். ரோஹித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் ராகுல் என மூன்று துவக்க வீரர்களும் அணியில் இடம் பெற்றனர்.

பேட்டிங் வரிசை மாற்றம்

பேட்டிங் வரிசை மாற்றம்

மூன்று துவக்க வீரர்கள் இடம் பெற்றதால் அணியின் பேட்டிங் வரிசையை மாற்றினார் கேப்டன் கோலி. தன் மூன்றாவது பேட்டிங் வரிசை இடத்தை துவக்க வீரர் ராகுலுக்கு அளித்தார்.

ரோஹித் ஏமாற்றம்

ரோஹித் ஏமாற்றம்

இந்திய அணியின் பேட்டிங் இன்னிங்க்ஸில் துவக்க வீரர் ரோஹித் சர்மா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து தவான் - ராகுல் ஜோடி அணியை மீட்டு சிறப்பாக ஆடினர்.

ராகுல் - தவான்

ராகுல் - தவான்

ராகுல் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், தவான் 74 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து விராட் கோலி நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார்.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

கோலி ஒரு சிக்ஸர் அடித்து, பின் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் 4, ரிஷப் பண்ட் 28, ஜடேஜா 25 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினர்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ஓரளவு ரன் சேர்க்க இந்திய அணி 49.1 ஓவரில் 10 விக்கெட்கள் இழந்து 255 ரன்கள் சேர்த்தது. மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததே இந்திய அணியின் இந்த மோசமான செயல்பாட்டிற்கு காரணம். துவக்கத்தில் இந்திய அணி ஓவருக்கு 5 ரன்கள் என்ற அளவில் ரன் குவித்து வந்தது.

கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா

கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா

அதனால், இறுதி ஓவர்களில் ரன் குவித்து எப்படியும் 300 ரன்களை கடக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், இந்திய அணியின் ரன் ரேட் 5 ரன்களுக்கு மேல் செல்லாதவாறு பார்த்துக் கொண்டனர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்.

இந்திய அணிக்கு சிக்கல்

இந்திய அணிக்கு சிக்கல்

இந்திய அணி சரியாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே வைத்துக் கொண்டு, கூடுதல் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இந்தப் போட்டியில் களமிறங்கியது மேலும் சிக்கலை உண்டாக்கியது. அந்த ஐந்து பந்துவீச்சாளர்களைக் கொண்டே ஆஸ்திரேலிய அணியின் சேஸிங்கை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது இந்திய அணி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs AUS : India failed to score big as Australian bowling attack was superb. India only scored 255 runs from 49.1 overs.
Story first published: Tuesday, January 14, 2020, 19:16 [IST]
Other articles published on Jan 14, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X