உங்களுக்கு வேறு பிழைப்பே இல்லையா? விஸ்வரூபம் எடுக்கும் ஸ்மித் விவகாரம்.. தீவிரமாகும் பிரச்சனை!

சிட்னி: இந்திய வீரர்களை ஸ்டீவ் ஸ்மித் ஏமாற்றவில்லை, அவரை தேவையின்றி விமர்சனம் செய்ய வேண்டாம் என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாஞ்சர் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மூத்த வீரர் ஸ்மித் நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்திய வீரர் பண்ட் போட்டு வைத்து இருந்த கார்டை ஸ்மித் மைதானத்தில் அழித்தார்.

இதை எல்லாம் ஆரம்பிச்சு வைச்சதே கங்குலி தான்.. என்ன செய்வார் தெரியுமா? ஆஸி. வீரர் சர்ப்ரைஸ்!

யாருக்கும் தெரியாமல் பண்ட் வரைந்து வைத்து இருந்த கோட்டை ஸ்மித் அழித்தார். ஸ்மித்தின் இந்த செயல் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

என்ன

என்ன

இந்த நிலையில் ஸ்மித்தின் செயலை கிரிக்கெட் விமர்சகர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாஹன் விமர்சனம் செய்து இருந்தார். அதில், ஸ்மித் செய்தது மிகவும் மோசமான செயல். அவர் இப்படி செயல்பட்டு இருக்க கூடாது. உப்புத்தாள் மோசடிக்கு பின் ஸ்மித் இப்படி நடந்து கொண்டது இல்லை.

விமர்சனம்

விமர்சனம்

ஆனால் தற்போது அவர் மீண்டும் எல்லை மீறி உள்ளார்.அவர் களத்தில் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமாக இருக்கிறது. அதிலும் அவர் சக வீரர்களை ஸ்லெட்ஜ் செய்த விதமும், பண்டின் கார்டை நீக்கிய விதமும் மிகவும் மோசமாக இருந்தது என்று குறிப்பிட்டு இருந்தார்.

 சர்ச்சை

சர்ச்சை

இந்த நிலையில் மைக்கேல் வாஹன் விமர்சனத்திற்கு தற்போது ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாஞ்சர் பதில் அளித்துள்ளார். அதில், ஸ்மித் குறித்து மைக்கேல் வாஹன் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்மித் இங்கே எந்த தவறும் செய்யவில்லை. ஸ்மித் எப்போதும் இப்படித்தான் மைதானத்தில் பேட்டிங் செய்து பார்ப்பார்.

பண்ட்

பண்ட்

அவர் பண்டின் கார்டை நீக்கவில்லை. இதை தவறாக சித்தரிக்க பார்க்கிறார்கள். மைக்கேல் வாஹன் பேசுவது தவறு. இப்படி பிறரை விமர்சித்தே அவர் பணம் சம்பாதிக்கிறார். இப்படித்தான் மைக்கேல் வாஹன் பிழைப்பை ஓட்டுகிறார்.

கேட்க கூடாது

கேட்க கூடாது

இது போன்ற விமர்சனங்களை காது கொடுத்து கேட்க கூடாது. ஸ்மித் 100% குற்றமற்றவர். இதற்கும் மேல் ஸ்மித்தை வைத்து தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்த முயற்சி செய்ய கூடாது என்று ஜஸ்டின் லாஞ்சர் குறிப்பிட்டு உள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Ind vs Aus: Steve Smith didnt remove Pants guard says Australian coachc Justin Langer.
Story first published: Wednesday, January 13, 2021, 15:18 [IST]
Other articles published on Jan 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X