For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 மடங்கு வேகத்தில் பாண்டிங் சாதனை காலி.. சச்சின் சாதனை சமன்.. 70வது சதம் அடித்த செஞ்சுரி மன்னன்!

Recommended Video

Virat Kohli 70th century| 70வது சதம் அடித்த செஞ்சுரி மன்னன்

கொல்கத்தா : வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தன் 27வது டெஸ்ட் சதத்தை கடந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி.

இந்த சதம் மூலம் வழக்கம் போல சில முக்கிய சாதனைகளை அடித்து உடைத்துள்ளார். டெஸ்ட் கேப்டன்களில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் முன்னேறி இருக்கும் கோலி, ரிக்கி பாண்டிங்கை முந்தி இருக்கிறார்.

இரண்டு மடங்கு வேகம்

இரண்டு மடங்கு வேகம்

மேலும், சில சாதனைகளை தன் வசம் ஆகி உள்ளார். கேப்டனாக விரைவாக சதம் அடிப்பதில் இரண்டு மடங்கு வேகமாக செயல்பட்டு ரிக்கி பாண்டிங்கை வீழ்த்தி வியக்க வைத்துள்ளார் கோலி.

இரண்டாவது டெஸ்ட்

இரண்டாவது டெஸ்ட்

கொல்கத்தாவில் நடந்து வரும் இந்திய அணியின் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 30.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 106 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

அடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் 21, மயங்க் அகர்வால் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து புஜாரா - கோலி கூட்டணி அமைத்து பேட்டிங் செய்தனர்.

புஜாரா, ரஹானே அரைசதம்

புஜாரா, ரஹானே அரைசதம்

புஜாரா 55, ரஹானே 51 ரன்கள் குவித்து அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர். கோலி தொடர்ந்து அபாரமாக ஆடி வந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 59 ரன்கள் அடித்து இருந்த கோலி இரண்டாம் நாள் ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தினார்.

கோலி 27வது சதம்

கோலி 27வது சதம்

இது டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் 27வது சதம் ஆகும். மேலும், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இது கோலியின் 70வது சதம் ஆகும். இந்த சதம் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார் கோலி.

பிங்க் பால் சதம்

பிங்க் பால் சதம்

இந்திய வீரர் ஒருவர் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் அடிக்கும் முதல் சதம் இது தான். மேலும், கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் தன் 19 சதத்தை எட்டி இருக்கிறார் கோலி.

பாண்டிங்கை முந்தினார்

பாண்டிங்கை முந்தினார்

இதன் மூலம் கேப்டனாக அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தினார். பாண்டிங் கேப்டனாக 18 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கிரேம் ஸ்மித் 25 சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

மொத்த சதங்கள்

மொத்த சதங்கள்

மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக அதிக சதங்கள் அடித்துள்ள பட்டியலில் 41 சதங்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கும் கோலி, அதற்கு 188 இன்னிங்க்ஸ் எடுத்துக் கொண்டுள்ளார்.

2 மடங்கு விரைவாக..

2 மடங்கு விரைவாக..

ரிக்கி பாண்டிங்கும் 41 சதங்கள் அடித்து இருந்தாலும், அவர் 376 இன்னிங்க்ஸில் அந்த சாதனையை செய்துள்ளார். கோலி இரண்டு மடங்கு வேகத்தில் 41 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் சாதனை சமன்

சச்சின் சாதனை சமன்

27 டெஸ்ட் சதங்களை விரைவாக அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சினுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் கோலி. இருவரும் 141 இன்னிங்க்ஸில் இதை செய்துள்ளனர்.

Story first published: Saturday, November 23, 2019, 16:07 [IST]
Other articles published on Nov 23, 2019
English summary
IND vs BAN : Virat Kohli breaks several records with his 27th test century.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X