சிவம் துபே நீக்கம்.. உள்ளே வந்த சிஎஸ்கே வீரர்.. கேப்டன் கோலி அதிரடி வியூகம்! #INDvsWI

காயம் ஏற்படாமல் இருப்பது தான் முக்கியம் - தீபக் சாகர்

விசாகப்பட்டினம் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆடுகிறது.

இந்த நிலையில், அணியை வலுப்படுத்த சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளார் கேப்டன் விராட் கோலி.

முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சுமாராக செயல்பட்ட புதுமுக வீரர் சிவம் துபேவை நீக்கி இருக்கிறார் கோலி.

ஷர்துல் தாக்குருக்கு வாய்ப்பு

ஷர்துல் தாக்குருக்கு வாய்ப்பு

அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான இவர், கடைசியாக செப்டம்பர் 2018இல் தான் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடி இருக்கிறார்.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

நீண்ட காலமாக அணியில் மாற்று வீரராக இடம் பெறுவதும், பின் வாய்ப்பு இல்லாமல் அணியில் இருந்து நீக்கப்படுவதுமாக காலம் கழித்து வந்த ஷர்துல் தாக்குருக்கு அதிர்ஷ்டவசமாக மீண்டும் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மாற்று வீரர் ஷர்துல் தாக்குர்

மாற்று வீரர் ஷர்துல் தாக்குர்

புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட போது, மாற்று வீரராக இடம் பெற்றார் ஷர்துல் தாக்குர். அணியில் கூடுதல் ஆல் - ரவுண்டர் தேவை என்பதால் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் சிவம் துபேவை முதல் போட்டியில் ஆட வைத்தார் கோலி.

சிவம் துபே சொதப்பல்

சிவம் துபே சொதப்பல்

எனினும், சிவம் துபே பேட்டிங்கில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி இறைத்து அணிக்கு சிக்கலை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவர் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அணியின் பந்துவீச்சு திட்டம்

அணியின் பந்துவீச்சு திட்டம்

ஆல் - ரவுண்டர் சிவம் துபேவுக்கு பதிலாக முழுமையான வேகப் பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்குரை அணியில் சேர்த்துள்ளார் கோலி. இதன் மூலம், அணியின் பந்துவீச்சு பலம் பெறும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் தீபக் சாஹர்

சிஎஸ்கே அணியின் தீபக் சாஹர்

இந்திய அணியில் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பட்டை தீட்டப்பட்ட தீபக் சாஹர் ஆடி வரும் நிலையில், அதே அணியில் தீப சாஹருடன் சேர்ந்து பந்து வீசிய ஷர்துல் தாக்குர் அணியில் இணைந்துள்ளார்.

சாஹல் இல்லை

சாஹல் இல்லை

சுழற் பந்துவீச்சாளர் சாஹலுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோலி, வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குரை அணியில் சேர்த்துள்ளார் விராட் கோலி.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இரண்டாவது போட்டியில் ஆடும் இந்திய அணி விவரம் - ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, குல்தீப் யாதவ்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs WI : Shivam Dube dropped by Captain Virat Kohli. Shardul Thakur finds place in playing XI.
Story first published: Wednesday, December 18, 2019, 15:25 [IST]
Other articles published on Dec 18, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X