For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

500வது டெஸ்ட்டில் இந்தியா.. அதில் பாதி போட்டிகள் இவர் இல்லாமல் நடந்ததே கிடையாது! #500thTest #INDvNZ

By Veera Kumar

கான்பூர்: இந்திய கிரிக்கெட் அணி இன்று தனது 500வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. ஆனால், இதில் 200 டெஸ்ட் போட்டிகளில் முகம் காட்டிய ஒரே வீரர் யார் தெரியுமா?

வரலாற்று சிறப்புமிக்க இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. ஆனால் ஒரு பேட்டிங் ஜாம்பவான், இந்த அணியின் 200 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்திருந்தார். அதாவது ஏறத்தாழ 40 சதவீத போட்டிகள் இவர் இன்றி நடைபெறவேயில்லை.

அந்த ஜாம்பவான் நீங்கள் யூகித்தபடியே, சச்சின் டெண்டுல்கர்தான். 24 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் சோபித்தவர் சச்சின். சரியாக 200 டெஸ்ட் போட்டிகளை அவர் ஆடியுள்ளார்.

உலகிலேயே அதிகம்

உலகிலேயே அதிகம்

உலகிலேயே இவ்வளவு அதிக டெஸ்ட் போட்டிகளை ஆடிய ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான். விளையாட்டைவிட்டு பிரிய அவருக்கு மனமேயில்லை என்பதையும், அவரது திறமை இந்திய அணிக்கு அவசியமாக தேவைப்பட்டது என்பதையுமே இது காட்டுகிறது.

பல காலமாக ஆடியவர்

பல காலமாக ஆடியவர்

1989ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட்டில் கால்பதித்த சச்சின், கடந்த 2013ல்தான் ஓய்வை அறிவித்தார். நடுவில் 1996 முதல் 2006க்கு இடைப்பட்ட கால கட்டத்தில் 25 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் கேப்டனாக செயல்பட்டார்.

ரன்களிலும் முதலிடம்

ரன்களிலும் முதலிடம்

இந்த நீண்ட காலகட்டத்தில், சச்சின் 51 முறை செஞ்சுரியை விளாசியுள்ளார். 15921 ரன்களை குவித்து டெஸ்ட் வீரர்களில் அதிக ரன் குவித்தோர் பட்டியலிலும் முதலிடத்திலுள்ளார் சச்சின்.

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

சச்சினுக்கு அடுத்தபடியாக நீண்ட அனுபவம் கொண்டவர் ஆஸி. கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங். 168 டெஸ்டுகளில் ஆடியவர். ராகுல் டிராவிட் 164 டெஸ்டுகளில் ஆடி இப்பட்டியலில் 6வது இடத்திலுள்ளார். பாண்டிங்கிற்கும், டிராவிட்டிற்கும் நடுவேயுள்ள இடங்களை, ஸ்டீவ் வாக், கல்லீஸ், சந்தர்பால் ஆகியோர் பகிர்ந்துள்ளனர். ஸ்டீவ் வாக்கும், பாண்டிங்கிற்கு ஈடாக 168 டெஸ்டுகளில் ஆடியவர்.

Story first published: Thursday, September 22, 2016, 13:50 [IST]
Other articles published on Sep 22, 2016
English summary
Team India became only the fourth Test playing nation in the history of the game to have played 500 Test matches.India's iconic batting legend, Sachin Tendulkar, has represented the Indian side for almost 40 per cent of the matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X