For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் மிக வயதான கிரிக்கெட் வீரர் கருடாச்சார் மரணம்.. 99 வயதில்!

பெங்களூரு: இந்தியாவின் மிக மிக வயதான கிரிக்கெட் வீரர் பி.கே.கருடாச்சார் தனது 99வது வயதில் பெங்களூரில் மரணமடைந்தார்.

இந்தியாவின் மிக மிக வயதான முதல் தர கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை உடையவர் கருடாச்சார். மைசூர் கேப்டனாக இவர் இருந்தவர்.

India's oldest first-class cricketer BK Garudachar dies aged 99

தனது 99 வயதில் இன்று அவர் பெங்களூரில் மரணமடைந்தார். கருடாச்சார் ஒரு ஆல் ரவுண்டர் ஆவார். வலது கை பேட்ஸ்மேனாகவும் லெக் பிரேக் பவுலராகவும் வலம் வந்தவர்.

27 முதல் தர போட்டிகளில் ஆடி 29.63 என்ற சராசரியுடன் 1126 ரன்களை எடுத்துள்ளார் அவர். 1935 முதல் 1946 வரை இவர் விளையாடியுள்ளார்.

கருடாச்சாரின் மறைவுக்கு கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

1917ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் பிறந்தார் கருடாச்சார். பெனாரஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை ுடித்தார். பின்னர் மைசூர் அணிக்காக விளையாடத் தொடங்கினார். பாம்பே அணிக்காகவும் இவர் ஆடியுள்ளார்.

பந்து வீச்சாளராக அவர் 100 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதில் 7 முறை 5 விக்கெட்களையும், 4 விக்கெட்களையும் எடுத்துள்ளார். 3 முறை பத்து விக்கெட் வீழ்த்தி சாதனையும் படைத்துள்ளார்.

இவர் ஒரே ஒரு சதம் போட்டுள்ளார். 1946ம ஆண்டு ஹோல்கர் அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை அரை இறுதிப் போட்டியின்போது இந்த சதத்தை அவர் போட்டார்.

Story first published: Saturday, February 27, 2016, 11:52 [IST]
Other articles published on Feb 27, 2016
English summary
India's oldest first-class cricketer and former captain of Mysore - as Karnataka was called till 1974 - BK Garudachar passed away today in the city aged 99. A right-hand batsman and a leg-break bowler, Garudachar made 1126 runs at an average of 29.63 from 27 matches in first-class cricket between 1935 and 1946.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X