For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா

மும்பை : கடந்த ஒரு மாதமாக டி20, ஒரு நாள் போட்டி என மாற்றி மாற்றி விளையாடி வந்த இந்திய அணி தற்போது மிகவும் முக்கியமான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக தயாராகி வருகிறது.

வரும் ஒன்பதாம் தேதி நாக்பூரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற முடியும்.

இந்த நிலையில் இந்திய அணியில் அனைத்து விதமான வீரர்களும் உள்ள நிலையில் ஒரே ஒரு குறை மட்டும் இருக்கிறது.ஆனால் அந்த குறை இந்திய ஆடுகளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை

வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்

வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து குணமடைந்த பிறகு தற்போது டி20 அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோன்று ஒரு நாள் தொடரிலும் முக்கியமான வீரராக ஹர்திக் பாண்டியா விளங்கி வருகிறார். இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா திரும்ப வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு பலமான அணியிலும் வேகப்பந்து வீசக்கூடிய பேட்டிங் தெரிந்த ஆல்ரவுண்டர்கள் நடு வரிசையில் களமிறங்குகிறார்கள்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலிய அணிக்கு கேமரான் கிரீன் மற்றும் மிட்சேல் மார்ஸ் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் தான் இருக்கிறார்கள் தவிர வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லை. அந்த இடத்தை ஹர்திக் பாண்டியா பூர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டியில் நடைபெறும் போது வேகப்பந்து வீச்சு பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.

பலம் அதிகரிக்கும்

பலம் அதிகரிக்கும்

ஆனால் அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் தான் இருப்பார்கள். இதனால் மூன்றாவது ஒருவர் பேட்டிங் தெரிந்து இடையில் இரண்டு மூன்று ஓவர்கள் வீசினால் அது அணிக்கு சிறப்பானதாக இருக்கும். மேலும் ரிஷப் பண்ட் தற்போது இல்லாத நிலையில் ஹர்ரிக் பாண்டியா போன்ற வீரர் அதிரடியாக விளையாட கூடியவர் அணியில் இருந்தால் அது இந்திய அணிக்கு மேலும் பலத்தை அதிகரிக்கும். ஆனால் இரண்டு உலக கோப்பை அடுத்தடுத்து நடைபெற உள்ளதால் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் இருந்து விலகி இருப்பார் என கருதப்படுகிறது.

ஹர்திக் பதில்

ஹர்திக் பதில்

இது குறித்து செய்தியாளர்கள் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் தற்போது பார்க்கலாம். நிச்சயமாக டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் சரியான நேரம் வரும்போது தான் நான் மீண்டும் விளையாடுவேன். தற்போது என்னுடைய கவனம் எல்லாம் வெள்ளை நிற கிரிக்கெட்டில் தான் இருக்கிறது. தற்போது அதுதான் முக்கியம் என நான் கருதுகிறேன்.

முயற்சி செய்வேன்

முயற்சி செய்வேன்

நேரம் சரியாக இருக்கும் போது எனது உடல் தகுதியும் சரியாக இருந்தால் நான் டெஸ்ட் போட்டியில் விளையாடவும் முயற்சி செய்வேன். இதுவரை ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு தான் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 3, 2023, 12:28 [IST]
Other articles published on Feb 3, 2023
English summary
India star all rounder Hardik Pandya on his return to test cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X