For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி, ரவி சாஸ்திரி சொல்வதை செய்யத் தயார்.. அதிர வைத்த ரோஹித்.. பரபர பேட்டி!

மும்பை : இந்திய அணியில் ரோஹித் சர்மா மூத்த வீரராக இருந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் உள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கூட அவர் டெஸ்ட் அணியில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். அது அவரது முடிவு தான் என கூறினாலும், அவரை உடற்தகுதி தேர்வு செய்த பின்னரே சேர்த்துக் கொள்ள உள்ளது பிசிசிஐ.

இந்த நிலையில், ரோஹித் சர்மா ஒரு பேட்டியில் அணி நிர்வாகம் என செய்தாலும் செய்யத் தயார் என கோலி, ரவி சாஸ்திரி பற்றி குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

ரோஹித் சர்மா நீக்கம்

ரோஹித் சர்மா நீக்கம்

2020 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவரை ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்தே நீக்கியது பிசிசிஐ. பின்னர் அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆடியதால் டெஸ்ட் அணியில் மட்டும் சேர்த்தது.

மற்ற வீரர்களுக்கு விலக்கு

மற்ற வீரர்களுக்கு விலக்கு

ஆனாலும், அவர் மற்ற வீரர்களுடன் ஆஸ்திரேலியா செல்லவில்லை. அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்த பிசிசிஐ, வரை உடற்தகுதியை நிரூபிக்குமாறு கூறி உள்ளது. ஆனால், காயத்துடன் ஆஸ்திரேலியா சென்ற விரிதிமான் சாஹாவுக்கு அந்த கட்டுப்பாடு எதுவும் இல்லை. அவருக்கு உடற்தகுதியை நிரூபிக்க விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

டெஸ்ட் அணியில் மட்டும் இடம்

டெஸ்ட் அணியில் மட்டும் இடம்

ரோஹித் சர்மா தாமாகவே ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. அவர் டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடவே விருப்பம் தெரிவித்து இருக்கிறார். பிசிசிஐ தேர்வுக் குழு அணித் தேர்வை செய்யும் முன்னரே அவர் இதை கூறிய நிலையிலும் அவரை மொத்தமாக நீக்கி இருந்தது தேர்வுக் குழு.

எல்லாமே தெரியும்

எல்லாமே தெரியும்

பிசிசிஐக்கு ரோஹித் சர்மாவின் காயம் குறித்த உண்மை நிலை தெரிந்தும் அவரை ஏன் நீக்க வேண்டும், பின் ஏன் அவரை இந்தியா அனுப்பி உடற்தகுதியை நிரூபிக்குமாறு கூற வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் மற்றொரு சந்தேகமும் எழுந்துள்ளது.

டெஸ்ட் வாய்ப்பு

டெஸ்ட் வாய்ப்பு

ரோஹித் சர்மா உடற்தகுதியை நிரூபித்தாலும் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆட வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் ரோஹித் சர்மா தன் டெஸ்ட் அணி வாய்ப்பு குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

அவர்கள் சொல்வதை செய்யத் தயார்

அவர்கள் சொல்வதை செய்யத் தயார்

விராட் கோலி விடுப்பு எடுத்துக் கொண்டு செல்லும் நிலையில் யாரை அவர் இடத்தில் ஆட வைப்பது, யாரை துவக்க வீரராக ஆட வைப்பது என ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய வீரர்கள் முடிவு செய்து இருப்பார்கள் என இதுபற்றி கூறினார் ரோஹித் சர்மா.

போனால் தான் தெரியும்

போனால் தான் தெரியும்

நான் ஆஸ்திரேலியா சென்ற பின் என்ன நடக்கப் போகிறது என எனக்கு தெரிய வரும். நான் எங்கே வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன். அணி என்னை எங்கே பேட்டிங் செய்ய சொல்கிறதோ அங்கே பேட்டிங் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி தான் என்றார்.

கோலி, ரவி சாஸ்திரி

கோலி, ரவி சாஸ்திரி

ஆனால், அவர்கள் என் துவக்க வீரர் என்ற இடத்தை மாற்றுவார்களா? என எனக்கு தெரியவில்லை எனவும் சுட்டிக் காட்டி கூறினார் ரோஹித் சர்மா. அவர் குறிப்பிட்டார் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியைத் தான்.

மோசமான நிலை

மோசமான நிலை

ரோஹித் சர்மாவை ஏற்கனவே பல ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் புறக்கணித்த நிலையில் அவர் இந்தியாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டிகளில் சதம் மேல் சதமாக அடித்து தன் பார்மை நிரூபித்தார். அவரை ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் ஓரங்கட்டினால் அது பெரும் சர்ச்சையாக மாறும்.

Story first published: Sunday, November 22, 2020, 14:38 [IST]
Other articles published on Nov 22, 2020
English summary
India vs Australia : Rohit Sharma ready to bat at any position as decided by Virat Kohli and Ravi Shastri.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X