For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சத்தமில்லாமல் சாதித்த ஷமி.. அனில் கும்ப்ளேவின் 12 ஆண்டு கால சாதனை முறியடிப்பு

Recommended Video

சத்தமில்லாமல் சாதித்த ஷமி, 12 ஆண்டு கால சாதனை முறியடிப்பு- வீடியோ

பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஷமி சிறப்பாக பந்து வீசி வருகிறார். தற்போது அனில் கும்ப்ளேவின் 12 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்துள்ளார் ஷமி.

இந்தியா - ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷமி இந்த புதிய சாதனையை எட்டியுள்ளார்.

6 விக்கெட்கள் எடுத்த ஷமி

6 விக்கெட்கள் எடுத்த ஷமி

ஷமி ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக பந்து வீசி இது வரை 11 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸ்களில் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இரண்டாம் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் விக்கெட் எடுக்காத நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.

ஒரே ஆண்டில் அதிக விக்கெட்கள்

ஒரே ஆண்டில் அதிக விக்கெட்கள்

இதன் மூலம் ஒரே ஆண்டில் வெளிநாடுகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் 10 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 42 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் ஷமி.

எந்த நாடுகளில் விக்கெட் எடுத்தார்?

எந்த நாடுகளில் விக்கெட் எடுத்தார்?

தென்னாபிரிக்காவில் 3 டெஸ்ட்களில் 15 விக்கெட்கள், இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட்களில் 16 விக்கெட்கள், ஆஸ்திரேலியாவில் இதுவரை இரண்டு டெஸ்ட்களில் 11 விக்கெட்கள் என மொத்தம் 42 விக்கெட்களை தனதாக்கி உள்ளார் ஷமி.

போட்டிகள் மற்றும் விக்கெட்கள்

போட்டிகள் மற்றும் விக்கெட்கள்

இதற்கு முன் இந்திய அளவில் அனில் கும்ப்ளே 2006ஆம் ஆண்டில் 9 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடி 41 விக்கெட்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்துள்ளார் ஷமி. ஷமி அதற்கு பத்து போட்டிகள் எடுத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சராசரியில் ஷமி தான் டாப்

சராசரியில் ஷமி தான் டாப்

அதே சமயம், இந்த சாதனை செய்த ஆண்டுகளில் இவர்கள் இருவரின் பந்துவீச்சு சராசரி அடிப்படையில் பார்த்தால் ஷமி தான் முன்னணியில் இருக்கிறார். கும்ப்ளேவின் 2006 ஆம் ஆண்டு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள் சராசரி 35.17. ஷமியின் இந்த ஆண்டு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள் சராசரி 27.07.

பும்ராவுக்கும் வாய்ப்பு உண்டு

பும்ராவுக்கும் வாய்ப்பு உண்டு

இவர்கள் தவிர்த்து எரப்பள்ளி பிரசன்னா மற்றும் பும்ரா (இந்த ஆண்டில் இதுவரை) 39 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கின்றனர். 2018 ஆண்டின் கடைசி டெஸ்ட் போட்டியாக இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி அமையும். அந்த போட்டியில் பும்ரா அதிக விக்கெட்கள் வீழ்த்தும் பட்சத்தில் அனில் கும்ப்ளே மற்றும் ஷமியை முந்த வாய்ப்புள்ளது.

[பும்ரா, ஷமி மிரட்டல் பந்துவீச்சு.. சமாளிக்க முடியாமல் அடி வாங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள்]

Story first published: Monday, December 17, 2018, 16:28 [IST]
Other articles published on Dec 17, 2018
English summary
India vs Australia second test : Mohammed shami breaks Anil Kumble’s rare wicket record
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X