For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னய்யா! பேட்டிங் பண்ண சொன்னா டான்ஸ் ஆடற? ரோஹித்தை சிரிக்க வைத்த நியூசி. பேட்ஸ்மேன்

நேப்பியர் : இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ட்ரென்ட் பவுல்ட் பேட்டிங் செய்த போது, ரோஹித் சர்மா அவரை பார்த்து சிரித்து ரசித்த சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து காண்போம்.

நியூசிலாந்து தொடரில் கோலிக்கு ஓய்வு.. பிசிசிஐ அதிரடி முடிவு.. தற்காலிக கேப்டன் யார்?நியூசிலாந்து தொடரில் கோலிக்கு ஓய்வு.. பிசிசிஐ அதிரடி முடிவு.. தற்காலிக கேப்டன் யார்?

நியூசிலாந்து தடுமாற்றம்

நியூசிலாந்து தடுமாற்றம்

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். முதல் நான்கு ஓவர்களில் துவக்க வீரர்கள் இருவரும் வெளியேற அந்த அணி தடுமாறியது. அடுத்து தொடர்ந்து விக்கெட்கள் விழுந்து வந்தது. 35 ஓவர்களுக்குள் அந்த அணி 9 விக்கெட்களை இழந்தது.

ட்ரென்ட் பவுல்ட் திணறல்

அந்த சமயத்தில் கடைசி பேட்ஸ்மேனான ட்ரென்ட் பவுல்ட் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். 37வது ஓவரில் சாஹல் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். அப்போது தான் ரோஹித்தை சிரிக்க வைத்த அந்த சம்பவம் நடந்தது.

நடன அசைவுகள்

நடன அசைவுகள்

37வது ஓவரின் இரண்டாவது பந்தை வீசினார் சாஹல். அந்த பந்தை அடிப்பது போல ஏறி வந்த பவுல்ட், பந்து அருகில் வந்த உடன் பின்வாங்கி பந்தை தடுத்தார். இந்த தடுமாற்றத்தில் அவரது கால்கள் நடனம் ஆடுவதை போல முன்னேயும், பின்னேயும் சென்று வந்தது.

ரோஹித் சிரிப்பு

ரோஹித் சிரிப்பு

ஸ்லிப் திசையில் நின்று இருந்த ரோஹித் இந்த நடன அசைவுகள் போன்ற தடுமாற்றத்தை கண்டு ரசித்து சிரித்தார். வர்ணனையாளர்களும், பவுல்ட்-இன் தடுமாற்றம் குறித்து பேசினர். ட்ரென்ட் பவுல்ட் கடைசி பேட்ஸ்மேன் என்பதால் பேட்டிங்கில் தடுமாறுவது இயல்பு என்றாலும், அவர் தடுமாற்றம் மிகவும் வெட்ட வெளிச்சமாக இருந்தது.

குல்தீப் - தோனி திட்டம்

குல்தீப் - தோனி திட்டம்

சாஹலுக்கு அடுத்து குல்தீப் பந்துவீச வந்தார். அப்போது தோனி குல்தீப்பிடம், எப்படியும் பவுல்ட் தடுமாறுவார், பந்தை பார்க்காமல் தடுப்பார், அதனால், "ரவுண்ட் தி விக்கெட்" திசையில் பந்து வீசுமாறு கூறினார். அதே போல, வீசிய குல்தீப் அவர் விக்கெட்டை வீழ்த்தினார்.

Story first published: Thursday, January 24, 2019, 11:05 [IST]
Other articles published on Jan 24, 2019
English summary
India vs Newzealand : Rohit Sharma laughing at Trent Boult’s foot work against Spinners
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X