For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2வது டி20ல் இருந்த அதே வாணவேடிக்கை.. 3வது போட்டியிலும் 200+ கன்ஃபார்ம்.. ஆனால் ஒரே ஒரு சிக்கல் தான்!

இந்தூர்: தென்னாப்பிரிக்காவுடனான 3வது டி20 போட்டியிலும் ரசிகர்களுக்கு ஏக போக விருந்து காத்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி இன்று இரவு தொடங்கவுள்ளது.

முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்ட சூழலில் வைட் வாஷ் செய்யும் முணைப்புடன் ரோகித் படை களமிறங்குகிறது.

டி20 உலககோப்பையில் பும்ராவுக்கு பதில் யார்? 3 வீரர்களுக்கு வாய்ப்பு.. யாருக்கு இடம் கிடைக்கும் ?டி20 உலககோப்பையில் பும்ராவுக்கு பதில் யார்? 3 வீரர்களுக்கு வாய்ப்பு.. யாருக்கு இடம் கிடைக்கும் ?

 3வது டி20 போட்டி

3வது டி20 போட்டி

கடந்த 2வது போட்டியில் 238 ரன்களை இந்திய அணி குவிக்க, தென்னாப்பிரிக்க அணியும் 221 ரன்கள் வரை சேஸ் செய்து அசத்தியது. விராட் கோலி, கே.எல்.ராகுல், டேவிட் மில்லர் காட்டிய வாண வேடிக்கைகளை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்திருந்தனர். இந்நிலையில் இன்றைய போட்டியிலும் அதே சுவாரஸ்யம் காத்துள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

போட்டி நடைபெறும் ஹோகர் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்த மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் மிக குறைந்த தூரத்தில் இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்கள் தொட்டவுடன் வேகமாக சிக்ஸருக்கு பறக்கும். இதே போல பிட்ச் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சற்று உதவினாலும், பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே நிறைந்து இருக்கும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பெரியளவில் டேர்ன் கிடைக்காது.

இந்தியாவின் ரெக்கார்ட்

இந்தியாவின் ரெக்கார்ட்

இதே மைதானத்தில் தான் இந்திய அணி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது உட்சபட்ச ஸ்கோரை அடித்தது. இலங்கை அணிக்கு எதிராக 260 ரன்களை குவித்தது. இதில் ரோகித் சர்மா 43 பந்துகளில் 118 ரன்களை விளாசினார். இதுவரை 2 டி20 போட்டிகள் மட்டுமே இங்கு நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த ஒரு அணியும், முதலில் பவுலிங் செய்த ஒரு அணியும் வெற்றி கண்டுள்ளன.

டாஸில் என்ன செய்யனும்?

டாஸில் என்ன செய்யனும்?

டாஸ் வெல்லும் அணி இந்த மைதானத்தில் பேட்டிங்கை தேர்வு செய்வதே நல்லது. பேட்டிங் செய்வது சற்று சிரமமாக இருக்கும். முதல் இன்னிங்ஸில் 200+ ரன்களை குவித்துவிட்டால், பதற்றம் காரணமாகவும் எதிரணி திணறலாம். எனவே ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட வேண்டும்.

Story first published: Tuesday, October 4, 2022, 16:07 [IST]
Other articles published on Oct 4, 2022
English summary
India vs south africa 3rd t20 match Pitch report, BCCI gives Special treatment in Indore Holkar stadium
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X