For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2004ல் நடந்த அதே சம்பவம்.. பறந்து கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்.. அந்த ஒரு விக்கெட்! - வீடியோ

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் நேற்று எடுத்த விக்கெட் ஒன்றில் மூலம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

By Shyamsundar

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் நேற்று எடுத்த விக்கெட் ஒன்றின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

கொல்கத்தா அணிக்காக கேப்டன் தினேஷ் கார்த்திக் வரிசையாக வெற்றியை பதிவு செய்து வருகிறார். நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் அந்த அணி அதிரடியாக வெற்றிபெற்றது.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 160 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மாஸ் கீப்பிங்

நேற்றைய போட்டியில் இவர் ரஹானேவை எடுத்து விக்கெட் இப்போதும் புல்லரிக்க வைக்க கூடிய ஒன்று. தனக்கு முன்பு கிடந்த பந்தை வேகமாக ஓடி சென்று எடுத்து, கிளவுஸை கழற்றி, பின் பின்பக்கமாக பறந்து சரியாக ஸ்டம்பில் வீசி அவுட் செய்ததை, எந்த வார்த்தையாலும் வர்ணிக்க முடியாது. இது வீடியோவாக வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

2004ம் வருடம்

சில விஷயங்களை மாற்ற முடியாது. என்னதான் வயதானாலும் சிலரின் திறமை எப்போதும் குறையாமல் கூடிக்கொண்டே இருக்கும். நேற்று இவர் எடுத்த விக்கெட் போலவே 2004லிலும், இவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தார். எல்லோரும் இரண்டு விக்கெட்டும் ஒரே மாதிரி இருப்பதாக பேசி வருகிறார்கள்.

அடுத்த டோணி

இவர் ''நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் எடுத்த விக்கெட் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பான ஒன்று. அவர் விரைவில் டோணியின் இடத்தை பிடிப்பார்'' என்றுள்ளார்.

சூப்பர் தினேஷ்

இவர் ''தினேஷ் கார்த்திக் ஆட்டம் என்னை கவர்ந்துவிட்டது. அவர் போட்டியின் போது மிக சிறப்பான முடிவுகளை எடுக்கிறார். கடைசியில் சிக்ஸ் அடித்து போட்டியை நிறைவு செய்கிறார். கண்டிப்பாக விரைவில் டோணி இடத்தை பிடிப்பார்'' என்றுள்ளார்.

Story first published: Thursday, April 19, 2018, 12:26 [IST]
Other articles published on Apr 19, 2018
English summary
Dinesh Karthik's best keeping to take Rahane's out becomes viral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X