For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இஷான் கிஷான் முகத்தை பதம் பார்த்த பந்து.. பதறி அடித்து ஓடிய ஹர்திக் பாண்டியா.. நேற்று நடந்த பரபரப்பு

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்தை எறிந்த போது, அது மும்பை இந்தியன்ஸ் அணியின் கீப்பர் இஷான் கிஷான் முகத்தை மோசமாக தாக்கியுள்ளது.

By Shyamsundar

Recommended Video

ஹர்திக் பாண்டிய வீசிய பந்து இஷான் கிஷான் கண்ணை பதம் பார்த்தது

மும்பை: நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்தை எறிந்த போது, அது மும்பை இந்தியன்ஸ் அணியின் கீப்பர் இஷான் கிஷான் முகத்தை மோசமாக தாக்கியுள்ளது.

நேற்று மும்பைக்கும், பெங்களூர் அணிக்கும் இடையில் மும்பை மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசியில் மும்பை அணி வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித்தும், பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லியும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். இஷான் கிஷான் பாதி போட்டியில் வெளியேறினார்.

எப்படி தாக்கியது

எப்படி தாக்கியது

சரியாக மும்பை அணி 13 வது ஓவர் போடும் போது இந்த சம்பவம் நடந்தது. பீல்டிங் செய்த ஹர்திக் பாண்டியா, பந்தை பிடித்து வேகமாக கீப்பரை நோக்கி வீசினார். ஆனால் பந்து தரையில் பட்டு மேலே சென்று, கீப்பர் இஷான் கிஷான் முகத்தில் பட்டது. உடனே அவர் கீழே விழுந்து துடிக்க ஆரம்பித்தார்.

ஹர்திக் பாவம்

ஹர்திக் பாவம்

இதை பார்த்த வீரர்கள் எல்லோரும் அவரிடம் பதறி அடித்து ஓடினார்கள். இஷான் கீழே விழுந்து, கத்திக் கொண்டே இருந்தார். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி கொண்டு வரப்பட்டது. அவரது கண்களுக்கு கீழே பெரிய அளவில் காயம் ஏற்பட்டு இருந்தது. லேசாக அதில் ரத்தம் வடிந்து கொண்டு இருந்தது.

புது வீரர்

புது வீரர்

இதையடுத்து அவர் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார். நல்ல பார்மில் இருக்கும் அவருக்கு ரசிகர்கள் கைதட்டி விடையளித்தனர். மீதம் இருக்கும் ஓவர்களில் கீப்பராக ஆதித்யா டேர் என்ற வீரர் நியமிக்கப்பட்டார். போட்டி முடியும் வரை இஷான் கிஷான் வெளியே வரவேயில்லை.

அடுத்த போட்டியில் விளையாடுவார்

அடுத்த போட்டியில் விளையாடுவார்

இந்த நிலையில் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அவர் கண்களில் எந்த காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. லேசான வீக்கம் மட்டும் இருப்பதாகவும் , அந்த வீக்கமும் இன்னும் இரண்டு நாட்களில் சரியாகிவிடும் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

மோசமான வீடியோ

இதுபற்றி வீடியோ வெளியாகி உள்ளது. ஹர்திக் பாண்டியா வருத்தப்பட்டுக் கொண்டு ஓடும் நிகழ்வு இதில் பதிவாகி உள்ளது. மற்ற வீரர்களும் இஷான் கிஷனை சோகமாக இதில் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Story first published: Wednesday, April 18, 2018, 12:49 [IST]
Other articles published on Apr 18, 2018
English summary
Hardik Pandya's throw hits Ishan Kishan face in yesterday match against Bengaluru.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X