ஐ.பி.எல். 11- போட்டி விவரங்கள் வெளியீடு- ஏப். 7-ல் மும்பையுடன் மோதுகிறது சென்னை!

Posted By:
ஐ.பி.எல். அட்டவணை வெளியீடு... முதல் போட்டியிலேயே சென்னை களம் இறங்குகிறது | Oneindia Tamil

டெல்லி: 11-வது ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 7-ந் தேதி மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேட்ச் பிக்ஸிங் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

IPL 2018: Mumbai Indians to take on Chennai Super Kings in opener on April 7

இத்தடை காலம் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியுள்ளது. 11-வது ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உட்பட 9 நகரங்களில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் போட்டி நடைபெறுகிறது.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னையைப் போல 2 ஆண்டு தடையை எதிர்கொண்ட ராஜஸ்தான் அணி ஏப்ரல் 9-ந் தேதியன்று ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
The eleventh edition of the VIVO Indian Premier League is set to kick off with a blockbuster match on April 7 at the Wankhede Stadium where defending champions Mumbai Indians will take on two-time winners Chennai Super Kings.
Story first published: Thursday, February 15, 2018, 8:20 [IST]
Other articles published on Feb 15, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற