டாஸ் வென்றால் மேட்ச் வெல்லலாம்.. ஒருவருக்கு காயம்.. 7 போட்டியிலும் ஒரே மாதிரி நடந்த சம்பவங்கள்!

Posted By:
IPL 2018: 7 போட்டியிலும் ஒரே மாதிரி நடந்த சம்பவங்கள்!

சென்னை: ஐபிஎல் போட்டியில் இதுவரை நடந்த போட்டிகள் எல்லாவற்றிக்கும் சில முக்கியமான ஒற்றுமைகள் இருக்கிறது. எல்லா போட்டியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நடந்து இருக்கிறது என்று கூட சொல்லலாம்.

ஐபிஎல் தொடரில் மொத்தம் 60 போட்டிகள் நடக்கும். இதுவரை ஒரே வாரத்தில் மொத்தம் 7 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்று பஞ்சாப்பிற்கும், பெங்களூருக்கும் இடையில் போட்டி நடக்க உள்ளது.

புள்ளி பட்டியலில் இரண்டு வெற்றிகளுடன் ஹைதராபாத் அணி முதல் இடத்தில் இருக்கிறது. சென்னை அணி ரன் ரேட் அடிப்படையில் இரண்டாம் இடம் வகிக்கிறது. டெல்லி கடைசி இடத்தில் உள்ளது.

பவுலிங் தேர்வு

பவுலிங் தேர்வு

இந்த ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான ஒற்றுமை என்றால் அது டாஸ் வெற்றி பெறுவதுதான். முதல் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றது தொடங்கி நேற்று ஹைதராபாத் டாஸ் வென்றது வரை, எல்லா அணிகளும் முதலில் பந்து வீசவே முடிவு செய்து இருக்கிறது. எந்த அணி டாஸ் வெல்கிறதோ அந்த அணி சேசிங்கையே தேர்வு செய்கிறது.

வெற்றி பெறுகிறார்கள்

வெற்றி பெறுகிறார்கள்

அதேபோல் இதில் மிக முக்கியமான ஒற்றுமை இருக்கிறது. எந்த அணி ஐபிஎல் போட்டியில் டாஸ் வெல்கிறதோ அந்த அணியே போட்டியில் வெற்றி பெறுகிறது. டெல்லி ராஜஸ்தான் போட்டி மட்டுமே இதற்கு விதிவிலக்கு. பொதுவாக டி-20 போட்டியில் சேசிங் செய்யும் அணியே இதுவரை அதிக முறை வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் ஐபிஎல்லில் கடந்த 7 போட்டியிலும் இதுவே நடந்துள்ளது.

கடைசி நேரம்

கடைசி நேரம்

இந்த ஐபிஎல் தொடரில் நடக்கும் மிக முக்கியமான விஷயம் என்றால், அது கடைசி நேர பதற்றம்தான். சென்னை அணி முதல் போட்டியை மிகவும் த்ரில்லாக வெற்றி பெற்றது. அப்போது தொடங்கி நேற்றைய போட்டியில் கடைசி நேரத்தில் 1 விக்கெட், 1 ரன், 1 பால் என்று ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது வரை எல்லா போட்டியும் மிகவும் த்ரில்லாக இருந்தது. கடைசி ஓவரில்தான் போட்டியே மாறுகிறது.

காயம் வெளியேற்றம்

காயம் வெளியேற்றம்

இந்த ஐபிஎல் தொடரில் மோசமான விஷயம் என்றால் அது காயம்தான். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு முக்கியமான வீரர் காயத்திற்கு உள்ளாகிறார். முதல் போட்டியில் கேதார் ஜாதவ் காயமடைந்தார், பின்னர் பேட் கும்மின்ஸ், ரெய்னா, பாண்டியா, புவனேஷ்வர் குமார் என்று வரிசையாக ஐபிஎல் வீரர்கள் காயமடைந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் எல்லா போட்டியிலும் புதிய வீரர் இடம்பெறுகிறார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
IPL 2018: Similarities of last 7 IPL matches.
Story first published: Friday, April 13, 2018, 11:19 [IST]
Other articles published on Apr 13, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற