தினேஷ் கார்த்திக் முதல் கேன் வில்லியம்சன் வரை.. ஐபிஎல்லில் அதிர வைக்கும் புது கேப்டன்கள்!

Posted By:
தினேஷ் கார்த்திக் முதல் கேன் வில்லியம்சன் வரை..வீடியோ

சென்னை: இந்த ஐபிஎல் தொடரில் கடைசி நேரத்தில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட மூன்று பேர் தான் இப்போது மிகவும் சிறப்பாக கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன்கள் மோசமாக சொதப்பி வருகிறார்கள்.

ஐபிஎல் தொடரில் டோணி, கோஹ்லி, ரோஹித் சர்மா, கம்பீர் ஆகியோர் அதிகம் எதிர்பார்க்கப்பட்டார்கள். இதில் டோணியை தவிர மற்ற மூன்று கேப்டன்களும் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார்கள்.

ஆனால் இவர்கள் எல்லாம் கேப்டனா என்று கிண்டல் செய்யப்பட்ட அஸ்வின் போன்றவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இது ஐபிஎல் தொடரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூன்று பேர்

மூன்று பேர்

இந்த ஐபிஎல் போட்டியில் மொத்தம் மூன்று புதிய கேப்டன்கள் கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்பதே அப்போது மிகவும் ஆச்சர்யமான விஷயம் ஆகும். தினேஷ் கார்த்திக், அஸ்வின், கேன் வில்லியம்சன் ஆகியோர், அவர்கள் இருக்கும் அணிக்கு கடைசி நேரத்தில்தான் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். ஆனால் தாங்கள் ஏன் கேப்டனாக நியமிக்கப்பட்டோம் என்று அவர்கள் தினமும் நிரூபித்து வருகிறார்கள்.

அஸ்வின் கேப்டன்

அஸ்வின் கேப்டன்

அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, அவரை வைத்து எல்லோரும் கிண்டல் செய்து கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது 3 போட்டிகளில், 1 போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு பஞ்சாப் அணியை கொண்டு வந்துள்ளார். அஸ்வின் கேப்டன் ஆன பின் பேட்டிங், பீல்டிங்கிலும் கலக்கிக் கொண்டு இருக்கிறார். கோஹ்லி, டோணி, ரோஹித் போன்ற முக்கியமான கேப்டன்களுக்கு போட்டியாக அணியை வழிநடத்திக் கொண்டு உள்ளார்.

கேப்டன் தினேஷ் கார்த்திக்

கேப்டன் தினேஷ் கார்த்திக்

இன்னொரு தமிழரான தினேஷ் கார்த்திக் கேப்டன் ஆனதும் கூட ஆச்சர்யமான விஷயம்தான். தன்னுடைய அணியில் இருக்கும் வீரர்களை எப்போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது இவருக்கு தெரிந்துள்ளது. சில முக்கியமான பேட்ஸ்மேன்களை கடைசி நேரத்தில் களமிறக்கி கடைசி நேர ரன் ரேட்டை அதிகப்படுத்துகிறார். அதேபோல் எப்போது, எந்த பவுலருக்கு ஓவர் கொடுக்க வேண்டும் என்று வித்தியாசமான முறைகளை பயன்படுத்தி வருகிறார். இது நாளுக்கு நாள் உலகக் கோப்பை போட்டியில் அவரது இருப்பை அதிகரித்து வருகிறது.

கேப்டன் கேன் வில்லியம்சன்

கேப்டன் கேன் வில்லியம்சன்

இதில் மிகவும் கடைசி நேரத்தில் கேப்டன் ஆனவர் என்றால் அது கேன் வில்லியம்சன்தான் . ஹைதராபாத் அணி வார்னர் இல்லாமல் தவித்த போது, கடைசியில் அணிக்குள் வந்தார், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன். ஆனால் ஒரு வாரத்தில் அணியின் பவுலிங் பலத்தை புரிந்து கொண்டு அதை வைத்தே மூன்றில் மூன்று போட்டிகளை வெற்றிபெற்றுள்ளார். இப்போது புள்ளிகள் பட்டியலில் ஹைதராபாத் அணிதான் முதல் இடத்தில் இருக்கிறது. கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியை பைனலுக்கு கொண்டு சென்றால் கூட சந்தேகப்படுவதற்கு இல்லை.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Three New Captains become sensational in this season IPL 2018.
Story first published: Tuesday, April 17, 2018, 10:42 [IST]
Other articles published on Apr 17, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற