For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அம்பானி டீம்னா சும்மாவா.. காயம்பட்ட வீரருக்கு செம கவனிப்பு.. கை கொடுக்கும் மும்பை இந்தியன்ஸ்!!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமான இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப், காயத்தால் பாதி தொடருடன் போட்டிகளில் இருந்து விலகினார்.

அவரது காயத்தில் இருந்து குணமாகவும், மீண்டும் கிரிக்கெட் ஆட தேவையான பயிற்சிகள் உள்ளிட்ட முழு உதவிகளையும் மும்பை இந்தியன்ஸ் அணி செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

IPL 2019 : Alzarri Joseph will get complete rehabilitation with the help of Mumbai Indians

அல்சாரி ஜோசப் தான் அறிமுகமான முதல் ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட்கள் எடுத்து மிரட்டினார். எனினும், அடுத்த சில போட்டிகளில் அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பின்னர், அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால், வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பை அணிக்கும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், கடும் மன உளைச்சலில் இருந்தார் ஜோசப்.

அஸ்வின் உலகக்கோப்பையில் ஆடுறதுக்கு வாய்ப்பில்லை.. ஆனா அவரோட சீடர் ஆடப் போறாரே! அஸ்வின் உலகக்கோப்பையில் ஆடுறதுக்கு வாய்ப்பில்லை.. ஆனா அவரோட சீடர் ஆடப் போறாரே!

இந்த நிலையில் தங்கள் அணி வீரருக்கு நேர்ந்த சோகத்திற்கு உதவி செய்யும் வகையில், அவரது தோள்பட்டை காயத்தை சீராக்க ஆகும் மருத்துவ செலவையும், அதன் பின் தொடர்ந்து கிரிக்கெட் போட்டியில் ஆடும் அளவுக்கு தகுதி பெற ஆகும் பயிற்சி செலவையும் மும்பை இந்தியன்ஸ் அணியே ஏற்க உள்ளதாக தெரிகிறது.

மேலும், சிகிச்சை, பயிற்சி ஆகியவை முடிய 4-5 மாதங்கள் ஆகலாம். அந்த காலம் முழுவதும் ஜோசப், தன் குடும்ப உறுப்பினர் ஒருவருடன், மும்பை இந்தியன்ஸ் விருந்தினர் மாளிகையில் இலவசமாக தங்கி இருக்கலாம். பின்னே.. அம்பானி டீம்னா சும்மாவா?

Story first published: Thursday, May 9, 2019, 18:50 [IST]
Other articles published on May 9, 2019
English summary
IPL 2019 : Alzarri Joseph will get complete rehabilitation with the help of Mumbai Indians
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X