For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது அவுட்டா? அம்பயருடன் சண்டை போட்டு.. பேட்டால் ஸ்டம்ப்பை தகர்த்த ரோஹித்.. கோலி ரசிகர்கள் மகிழ்ச்சி!

கொல்கத்தா : இதுவரை இல்லாத அளவு ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் எல்லை மீறி நடந்து கொள்வது 2019 ஐபிஎல் தொடரில் அதிகரித்துள்ளது.

அதன் புதிய வரவாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இணைந்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தேவையே இல்லாமல் அம்பயருடன் சண்டை போட்டுள்ளார் ரோஹித் சர்மா.

சிக்சர்களை விளாச தோள்பட்டையில் இருந்து எனக்கு சக்தி வருது..! அசத்தும் அதிரடி மன்னன் சிக்சர்களை விளாச தோள்பட்டையில் இருந்து எனக்கு சக்தி வருது..! அசத்தும் அதிரடி மன்னன்

ரோஹித் துவக்கம்

ரோஹித் துவக்கம்

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து அதிரடியாக 232 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா துவக்கம் அளித்து ஆடி வந்தார்.

அவுட்

அவுட்

ரோஹித் 12 ரன்கள் எடுத்து இருந்த போது, 4வது ஓவரில் ஹாரி கர்னி பந்தை தவறவிட்டார். அது காலில்பட்டது. அதற்கு எல்.பி.டபுள்யூ கேட்டது கொல்கத்தா அணி. அம்பயர் அவுட் கொடுத்தார்.

வாக்குவாதம்

அதை எதிர்த்து ரிவ்யூ கேட்டார் ரோஹித் சர்மா. ரிவ்யூவில் பந்து லெக் ஸ்டம்ப்பின் முனையை தகர்ப்பது தெரிந்தது. ஆனால், ரீப்ளே பார்த்த பின்னும் ஏற்றுக் கொள்ளாத ரோஹித் சர்மா, அம்பயருடன் வாக்குவாதம் செய்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

பின்னர், கோபத்தில் அம்பயர் முன் இருந்த ஸ்டம்ப்பை பேட்டால் அடித்து தகர்த்தார். ரோஹித் சர்மா எப்போதும் அமைதியான குணம் கொண்டவராகவே பார்த்த ரசிகர்களுக்கு இந்த செயல் அதிர்ச்சியை அளித்தது.

அபராதம்

அபராதம்

போட்டி முடிந்த பின் ரோஹித் சர்மாவிற்கு 15 சதவீதம் போட்டி சம்பளத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து கோலி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். ஏன் தெரியுமா?

கோலி சீண்டல்

கோலி சீண்டல்

கேப்டன் கோலியை ஆக்ரோஷமானவர், களத்தில் பொறுப்பில்லாமல் கோபத்தை காட்டுபவர் என ரோஹித் ரசிகர்கள் எப்போதும் கூறி, ரோஹித் சர்மாவை இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறுவார்கள்.

கோலி பற்றி..

கோலி பற்றி..

ஆனால், இப்போது ரோஹித் சர்மா செய்த காரியத்தைப் பார்த்து, இனிமேல் ரோஹித் ரசிகர்கள், கோலி பற்றி பேசக் கூடாது என சமூக வலைதளத்தில் எனக் கூறி சீண்டி வருகிறார்கள். இது தான் அந்த மகிழ்ச்சிக்கு காரணம்.

Story first published: Monday, April 29, 2019, 13:41 [IST]
Other articles published on Apr 29, 2019
English summary
IPL 2019 KKR vs MI : Rohit Sharma fined 15% after breached code of conduct
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X